பெரியாரை பேசினால் அவ்வளவுதான்.. போகிறபோக்கில் தட்டிய சிவக்குமார்.. தரமான பதிலடி கொடுத்த சத்யராஜ்
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சிவக்குமார். கடந்த பல வருடங்களாக திரைத்துறையில் இயங்கி வரும் அவரை; திரையுலகின் மார்க்கண்டேயன் என புகழ்வார்கள். மேலும் அவர் மீது அத்தனை நடிகர்களுக்கும் தனி மதிப்பு இருக்கிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது; பெரியார் கூறியதாக ஒரு கருத்தை சொல்ல; அருகில் இருந்த சத்யராஜ் உடனே சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்தது பலரிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று புகழப்படுபவர் சிவக்குமார். கடந்த பல வருடங்களாக திரைத்துறையில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் உடல்நலத்தின் மீதும் பெரிய கவனம் வைத்திருப்பவர். யோகா, தியானம் என தனது வாழ்க்கை முறையை அவர் வடிவமைத்ததால்தான் என்னவோ 85 வயதிலும் 40 வயதுக்காரர் மாதிரி ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இப்போது உள்ள இளம் ஹீரோக்கள் கூட; தங்களது உடல்நிலையை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை சிவக்குமாரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என இன்டஸ்ட்ரியில் சொல்வார்கள்.

ஓவர் ஸ்ட்ரிக்ட்: அதேபோல் வீட்டிலும் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டாகஇருப்பவர்தான் சிவக்குமார். அவரது இரண்டு மகன்கள் கோலிவுட்டில் பெரிய நடிகர்கள்; மகள் வளர்ந்துவரும் பின்னணி பாடகியாக இருக்கிறார். இவர் பெரிய ஸ்டாராக இருக்கும்போதுதான் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். ஆனாலும் நடுத்தர குடும்ப தலைவர் தனது பிள்ளைகளை எப்படி வளர்ப்பாரோ அப்படித்தான் சிவக்குமாரும் வளர்த்தார்கள். அவர்களும் தங்கள் தந்தை மீது அளவு கடந்த பாசமும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.
திரைத்துறையிலும் அப்படித்தான்: அவர்கள் மட்டுமின்றி திரைத்துறையில் இருக்கும் மற்ற கலைஞர்களும் சிவக்குமார் மீது தனி மதிப்பு வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மூன்று முதலமைச்சர்களுடனும், இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் நடிகர் விஜய்யுடனும் திரைப்படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிலடி கொடுத்த சத்யராஜ்: இந்நிலையில் சிவக்குமார் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "70 வயது, 90 வயது ஆன பிராமணர்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக உயிரோடு இருப்பார்கள். அவர்கள் ஆடு, மாடு, கோழி எல்லாம் சாப்பிடமாட்டார்கள். அதெல்லாம் ஜீரணம் ஆகாது. அவர்கள் ரசம் சாதத்தையும், மோரையும் சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். பெரியார் சொன்ன மாதிரி 70, 90 வயதிலும் ஆடு, மாடு, கோழி தின்றுவிட்டு ஜீரணம் பண்ண முடியாமல் இருக்கக்கூடாது" என்றார்.
அப்படியெல்லாம் சொல்லவில்லை: அப்போது அருகில் இருந்த சத்யராஜ், பெரியாரை பற்றி யார் தவறாக பேசினாலும் அவ்வளவுதான் என்கிற மோடில் சிரித்துக்கொண்டே, 'பெரியார் 95 வயதில் ஆடு, மாடு, கோழியை சாப்பிடவில்லை. சாப்பிடவும் சொல்லவில்லை. அவர் சமூக நீதியைத்தான் பேசினார். அசைவம் முக்கியம் அதில்தான் தேவையான புரத சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. வேண்டுமென்றால் மருத்துவரிடமே கேட்டுப்பாருங்கள்' என தரமான பதிலடி கொடுத்தார். அதற்கு சிவக்குமாரோ, இல்லை அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார் என மழுப்பலான பதிலை கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த பெரியாரியவாதிகள் சத்யராஜை பாராட்டிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
