ஹிப் ஹாப் ஆதியின் "சிவகுமாரின் சபதம்" ரிலீஸ் தேதி அப்டேட்!

சென்னை : இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர்,பாடகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ள நடிகர் ஹிப்ஹாப் ஆதி முன்னணி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் முன்னே நடிகராகவும் இப்பொழுது உயர்ந்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வரும் ஹிப்ஹாப் ஆதி அதில் சிவகுமாரின் சபதம் என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து வருகிறார்.

சிவக்குமாரின் சபதம் படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இப்பொழுது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஹிப்ஹாப்

தமிழ் சினிமாவில் ஹிப்ஹாப்

துள்ளலான ஹிப்ஹாப் இசையின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் ஹிப்ஹாப் ஆதி பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார். வணக்கம் சென்னை படத்தில் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் என்ற பாடலில் முதல் முறையாக தோன்றிய ஹிப்ஹாப் ஆதியை ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் சுந்தர் சி. தமிழ் ரசிகர்களுக்கு அந்த அளவிற்கு பரிச்சயமில்லாத ஹிப் ஹாப் இசையை தமிழ் சினிமாவில் முழுமையாக புகுத்திய பெருமை ஹிப் ஹாப் ஆதியையே சாரும். ஆம்பள வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் இசை அமைப்பாளராக பணியாற்றி வந்த ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து மீசைய முறுக்கு என்ற படத்தை இயக்கி நடித்திருந்த ஹிப்ஹாப் ஆதிக்கு மீண்டும் சுந்தர் சி கைகொடுக்கும் வகையில் இந்த படத்தை தயாரித்தும் இருந்தார். மீசைய முறுக்கு மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து இளம் ரசிகர்களிடம் அதிக ஆதரவை பெற்று வருகிறார்.

ஹீரோவாக அவதாரம்

ஹீரோவாக அவதாரம்

இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரையும் ஆட்டம் போடவைக்கும் ஹிப் ஹாப் ஆதியின் இசைக்கு பலரும் அடிமையாகி இருக்க நடிப்புக்கு மத்தியிலும் சில திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.அதே சமயம் தான் ஹீரோவாக நடிக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் சொந்தமாக இசை அமைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் காமெடி படமாக வெளியானாலும் ரசிகர்களை அந்த அளவுக்கு கவரவில்லை. எனவே சுமாரான வெற்றியை மட்டுமே நான் சிரித்தால் பெற்றுத் தந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கியிருந்தார்.

சிவகுமாரின் சபதம்

சிவகுமாரின் சபதம்

மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு இரண்டாவது படத்தையும் ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வரும் படத்திற்கு சிவகுமாரின் சபதம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சத்யா ஜோதி பிலிம்ஸ் உடன் இணைந்து இப்படத்தை ஹிப்ஹாப் ஆதி தயாரித்து வருகிறார். ஜாலியான திரைப்படமாக உருவாகிவரும் இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி இது வரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் சிவக்குமார் பொண்டாட்டி, பாகுபலிக்கு ஒரு கட்டப்பா மற்றும் தில்லாலங்கடி லேடி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்பு மொத்தமாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சிவக்குமாரின் சபதம் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

தியேட்டரில் ரிலீசாக

தியேட்டரில் ரிலீசாக

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்ததால் படங்களை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது திரைத்துறை. இந்த நிலையில்தான் தயாரிப்பாளர்கள் வேறு வழியில்லாமல் ஓடிடி தளம் நோக்கி நகர ஆரம்பித்தார்கள். கொரோனாவுக்கு மத்தியில் திரையரங்குகள் திறக்கப்படாத சூழ்நிலையில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்று வந்தன. இந்த நிலையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து இப்பொழுது திரையரங்குகள் திறக்கப்பட்டு புதிய படங்கள் வெளியாகி வருகிறது. தேக்கி வைக்கப்பட்டிருந்த பல திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீசாக ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதமும் தியேட்டரில் ரிலீசாக தயாராகி வருகிறது.

செப்டம்பர் 31

செப்டம்பர் 31

இன்னும் சில தினங்களில் சரத்குமாரின் சபதம் டீசர் மற்றும் டிரைலர் வெளியாக இருக்க செப்டம்பர் 31ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. சிவக்குமாரின் படத்தை தொடர்ந்து அன்பறிவு என்ற படத்திலும் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்க அந்தப் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதுவரை சிட்டி பாயாக கலக்கிக் கொண்டிருந்த ஹிப்ஹாப் ஆதி அன்பறிவு திரைப்படத்தில் பக்கா வில்லேஜ் பையனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஆதி இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. முதல் முறையாக ஆதி இரட்டை வேடத்தில் நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு இருக்கிறது மேலும் இதில் நடிகர் நெப்போலியன் மற்றும் ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சிவக்குமாரின் சபதம் மற்றும் அன்பறிவு என இரண்டு படங்களையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X