சொர்க்கமே என்றாலும்.. அது சொந்த ஊரை போல வருமா? பூர்வீக சொந்தங்களை சந்தித்த சிவகார்த்திகேயன்!

சென்னை: இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் SK20 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதன் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் திருநள்ளாறு கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட சிவகார்த்திகேயன், தனது பூர்வீக சொந்த ஊரான திருவாரூரில் உள்ள திருவீழிமிழலைக்கு விசிட் அடித்துள்ளார்.

சக்சஸ் சிவகார்த்திகேயன்

சக்சஸ் சிவகார்த்திகேயன்

மெரினா படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாகி 10 ஆண்டுகளில் கோலிவுட்டின் முன்னணி நடிகராக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், சிவகார்த்திகேயனின் டான் படத்தின் ரிலீசுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஷாருக்கான் பாணியில்

ஷாருக்கான் பாணியில்

டிவி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் மிகப்பெரிய உயரத்துக்கு சென்ற ஷாருக்கானை பாலிவுட்டில் எஸ்கே என்று அழைத்து வரும் நிலையில், கோலிவுட்டின் எஸ்கேவாக சிவகார்த்திகேயன் கலக்கி வருகிறார். அமிதாப் பச்சனின் டான் படத்தை ஷாருக்கான் அதே பெயரில் ரீமேக் செய்து நடித்த நிலையில், ஷாருக்கானை ஃபாலோ செய்வது போல டான் எனும் டைட்டிலில் உருவாகி வரும் கல்லூரி கலாட்டா படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

உக்ரைன் மாடல்

உக்ரைன் மாடல்

விஜய், தனுஷை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் பைலிங்குவல் படத்தில் சிவகார்த்திகேயனும் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 20வது படத்தை ஜதிரத்னலு படத்தை இயக்கி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் கே.வி. அனுதீப் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டு மாடல் அழகி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பூர்வீக கிராமத்துக்கு

பூர்வீக கிராமத்துக்கு

சமீபத்தில் படப்பிடிப்பின் இடையே கிடைத்த கேப்பில் திருநள்ளாறு கோயிலுக்கு சென்றுள்ள சிவகார்த்திகேயன், அப்படியே தனது பூர்வீக கிராமமான திருவாரூரில் உள்ள திருவீழிமிழலைக்கு சென்று அங்கே உள்ள சொந்தங்களையும் மக்களையும் சந்தித்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

பாச மழை

பாச மழை

பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளையாக நடித்த சிவகார்த்திகேயன் எப்போதுமே மக்களின் பாச மழையில் நனைந்து வருகிறார். சிவகார்த்திகேயனை பார்த்த ஊர் மக்கள் பலரும் அவருடன் கூட நின்று செல்ஃபி போட்டோக்களை எடுத்து மகிழ்ந்தனர். அதன் புகைப்படங்கள் அதிகளவில் ஷேர் ஆகி வருகின்றன.

Recommended Video

M.K Stalin , Simbu, Sivakarthikeyan wishes | Anbu Chezhiyan Daughter Marriage | Filmibeat Tamil
நாதஸ்வர கலைஞர்கள்

நாதஸ்வர கலைஞர்கள்

நடிகர் சிவகார்த்திகேயனின் கொள்ளு தாத்தாக்களான சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகிய இருவரும் நாதஸ்வரம் மற்றும் தவில் உள்ளிட்ட பாரம்பரிய இசை கலைகளில் இந்தியளவில் புகழ்பெற்றவர்களாம். திருவீழிமிழலை சகோதரர்கள்' என போற்றப்படும் கோவிந்தராஜப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் என்பது கூடுதல் சிறப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X