வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு.. ‘மாநாடு‘ விழாவில் எஸ்ஜே சூர்யா கலகல பேச்சு !

சென்னை : மாநாடு ட்ரெய்லரில் இடம்பெற்ற எஸ்.ஜே.சூர்யாவின் ட்ரெண்டிங் வசனமான "வந்தான்... சுட்டான்... செத்தான்... ரிப்பீட்டு வசனத்தை பேசி அனைவர் இடத்திலும் கைத்தட்டலை பெற்றார்.

Recommended Video

Yuvan -னை பங்கமாய் கலாய்த்த SJ Suryah | Maanadu Pre-release

மாநாடு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க, நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மிரட்டலான வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

மேலும், இயக்குனர் இமயம் பாரதிராஜா,மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாநாடு

மாநாடு

மாநாடு திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்.எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள மாநாடு படத்திற்கு பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த மாநாடு படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மாநாடு திரைப்படம் நவம்பர் 25ந் தேதி வெளியாக உள்ளது.

ட்ரெண்டிங் வசனமான

ட்ரெண்டிங் வசனமான

இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே. சூர்யா, வெங்கட் பிரபு,சுரேஷ் காமாட்சி அனைவருக்கும் நன்றி என்று கூறினார். மேலும் மாநாடு திரைப்படத்தின் ட்ரெண்டிங் வசனமான "வந்தான்... சுட்டான்... செத்தான்... ரிப்பீட்டு வசனத்தை பேசி அனைவர் இடத்திலும் கைத்தட்டலை பெற்றார்.

மங்காத்தா BGMம் Copy Paste

மங்காத்தா BGMம் Copy Paste

மேலும், இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயினை விட தனக்கும் சிம்புவுக்கும் தான் கெமிஸ்ட்ரி இருப்பதாக கூறினார். மேலும் யுவன்சங்கர் ராஜா மங்காத்தாவில் BGMல் கூட Copy Paste பண்ணி இருப்பாரு ஆனால், மாநாடு திரைப்படத்திற்கு காட்சிக்கு காட்சி வேற BGM வருதுனு கூறிய அவர் நான் இதை குறையா சொல்லல ஒரு படம் அவரை அவ்வளவு உணர்வு பூர்வமாக யோசிக்க வைத்துள்ளது என்றார்.

நான் வில்லன் கிடையாது

நான் வில்லன் கிடையாது

தொடர்ந்து பேசிய சூர்யா, தான் என்றைக்குமே வில்லன் கிடையாது, நான் எப்போதும் ஹீரோதான் என்றும் கூறியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தற்போது பொம்மை, கடமையை செய் உள்ளிட்ட திரைப்படங்களில் எஸ்.ஜே.சூர்யா முதன்மை கதாபாத்திரங்களிலும், மாநாடு, டான் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும் நடிக்கிறார். இவற்றைத் தவிர ஒரு வெப் சீரிஸிலிலும் நடித்து வருவதாகவும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X