எஸ்.ஜே.சூர்யாவின் நம்பிக்கை 'வில்'

By Staff
Click here for more images
பிரபாகர் இயக்கத்தில் உருவாகிக்க கொண்டிருக்கும் வில், தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று இயக்குநர் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

படு வித்தியாசமான கேரக்டரில் இப்படத்தில் நடிக்கிறார் சூர்யா. ஒரு காலத்தில் அஜீத்தின் ஆஸ்தான தயாரிப்பாளராக இருந்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்திதான் இப்படத்தைத் தயாரிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாலி மூலம் அறிமுகம் கொடுத்தவரும் சக்ரவர்த்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் உடல் ஊனமுற்றவராக நடிக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா. இப்படம் குறித்து சூர்யாவிடம் கேட்டபோது, வித்தியாசமான கதை பாஸ் இது. இப்படி ஒரு கதையை இதுவரை தமிழ் சினிமா கண்டதில்லை என்று தைரியமாக கூறுவேன்.

ஒரு கோவில் நிர்வாகத்தால் ஏற்படும் பிரச்சினைகள்தான் படத்தின் அடிப்படைக் கதை. இப்படத்தில் எனக்கு ஜோடியாக ஷெரீன் நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினும் இருப்பார் என நம்புகிறேன் என்றார் சூர்யா.

இந்தப் படத்திற்காக கடந்த 5 மாதங்களாக கடுமையாக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டாராம் சூர்யா. திருவான்மியூரில் உள்ள உடல் ஊனமுற்றோர் இல்லத்திற்குச் சென்று அவர்களைப் பார்த்து பல விஷயங்ளைத் தெரிந்து கொண்டாராம்.

நாள் முழுவதும், கேரக்டர்படி ஒரு கால், ஒரு கையை ஒரே கோணத்தில் வைத்துக் கொண்டு நடிக்க வேண்டியிருக்கிறதாம். மிகவும் சிரமப்பட்டு இந்தக் கேரக்டரை செய்து வருகிறாராம் சூர்யா. படப்பிடிப்புத் தளத்திலேயே ஒரு பிசியோதெரபிஸ்ட்டும் இருக்கிறாராம்.

வில்லாக வளைந்து நடித்து வரும் சூர்யாவுக்கு, வில் நிச்சயம் 'Win' தரும் என்று நம்பலாம்!

More from Filmibeat

Read more about: sj surya vil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X