மனிதன் பாதி… மிருகம் பாதி… மிரட்டும் எஸ்ஜே சூர்யா !

சென்னை : எஸ்ஜே சூர்யா நடிக்கும் கடமையை செய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இப்படத்தை நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். மேலும், மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

இயக்குநராகவும் நடிகராகவும் பெருந்திரளான மக்களைக் கவர்ந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவர், நடிகர் அஜித் நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார் எஸ்.ஜே.சூர்யா. தான் காதலித்த பெண் தம்பியை மணந்துகொண்ட பிறகும் அவளை அடையத் துடிப்பவனின் கதை அது. முதல் படத்திலேயே இப்படி ஒரு துணிச்சலான சப்ஜெகட்டை கையில் எடுத்து அதை முதிர்ச்சியுடன் கையாண்டிருப்பார். இந்தப் படம் மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்றதோடு அஜித். சிம்ரன் இருவருக்கும் அவர்களின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

ஹீரோவாக

ஹீரோவாக

இதையடுத்து, விஜய்,ஜோதிகாவை வைத்து சூர்யா இயக்கிய குஷி அவருக்கு தெலுங்கு, இந்தி திரையுலகங்களின் கதவுகளைத் திறந்துவைத்தது. நியூ படத்தில் கதாநாயகனாக நடிக்கும் துணிச்சலான முடிவை எடுத்தார். விவகாரமான கதையம்சம், இரட்டை அர்த்த வசனங்கள். கவர்ச்சியை அள்ளித் தெளித்த பாடல்களுடன் நிரம்பிய இந்தப் படம் புதுமையான கதை.

சைக்கோ வில்லன்

சைக்கோ வில்லன்

நியூ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துவந்த இவர். ஸ்பைடர் திரைப்படத்தில் சைக்கோ வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.

கடமையை செய் ஃபர்ஸ்ட் லுக்

கடமையை செய் ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில், எஸ்.ஜே சூர்யா கடைமையை செய் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். இயக்குனர் வெங்கட் ராகவன் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் எஸ்.ஜே சூர்யாவின் முகம் பாதி சிங்கத்தின் முகமாகவும், இரண்டு கண்களில் ஒரு கண் சிங்கப் பார்வையாகவும் மிரட்டும் கெட்டப்பில் உள்ளது. வித்தியாசமான இந்த போஸ்டர் வெளியாகி என்ன கதையாக இருக்கும் என்று யோசிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X