இது லிஸ்ட்லையே இல்லையே.. குட் பேட் அக்லியில் அஜித்துடன் எஸ்.ஜே.சூர்யாவும் இருக்காரா?

சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் இடையில் தடைப்பட்டிருந்த சூழலில் சில நாட்களுக்கு முன்னர் அஜர்பைஜானில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கிறார் அஜித்.

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

Ajith SJ Suryah Good Bad Ugly

அடுத்தக்கட்ட ஷூட்டிங்: அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்தாலும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பியிருந்தனர். மீண்டும் அஜர்பைஜானிலேயே ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின. மேலும் படக்குழுவும் அங்கு செல்வதற்கான வேலைகளை லைகா தொடங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம் லைகாவுக்கு பண பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது.

குட் பேட் அக்லி: இப்போது மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். இதுவரை படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கும் நடந்து முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார் என்றும், நயன்தாராவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

விறுவிறு ஷூட்டிங்: படமானது அடுத்த வருடம் ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஷெட்யூலுக்காக படக்குழு ஜப்பான் செல்லலாம் என்றும்; அந்த ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இதில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிஸி நடிகர்: எஸ்.ஜே.சூர்யா அஜித்தை இயக்கிதான் வாலி படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அதற்கு பிறகு குஷி, நியூ, இசை உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் நடிகராகவும் வலம் வந்தார். இப்போது அவர்தான் பிஸியான நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதில் அவர் வில்லன் ரோல் செய்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X