நாம வளர்ந்தா மட்டும் போதாது.. சுற்றத்தாரையும் வளர்த்து விடனும்ணே.. சபாஷ் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனின் அடுத்த தயாரிப்பை பிளாக் ஷீப் டீம் இயக்குகிறது
Recommended Video

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே புரொடக்ஷன்ஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். எப்போதுமே சக திறமைசாலிகளை அங்கீகரிக்கும் பண்புடையவர்.

சிவகார்த்திகேயன் தன்னுடைய எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள படம் கனா. இப்படத்தை சிவாவின் நெருங்கிய நண்பரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.
கனா திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், அடுத்ததாக எஸ்கே புரடக்ஷன் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்தை பிரபல யூட்யூப் சேனலான பிளாக் ஷீப் குழு இயக்க உள்ளதாகவும், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
அரசியல், நக்கல் நையாண்டி என பல தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் பிளாக் ஷீப் குழுவினர். பிளாக் ஷீப் குழுவினர் ஏற்கனவே ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்போது பிளாக் ஷீப் குழுவினரிடம் முழு படத்தையுமே ஒப்படைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











