'தண்ணிக்குள்ள என்ன பண்றீங்க பாஸ்..?' வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
சென்னை: நடிகர் சிம்பு புதிதாக எடுத்து புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன.
சிம்பு இப்போது நடித்துள்ள படம், ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், நவம்பர் 6 ஆம் தேதி நிறைவடைந்தது.
திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளனர்.

நிதி அகர்வால்
கிராமத்துப் பின்னணியை கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயின். நந்திதா ஸ்வேதா, பால சரவணன் உட்பட பலர் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார்.

ஸ்லிம் ஆன சிம்பு
இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம் ஆகி இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததும், படத்தில் பணியாற்றியவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கினார்.

டப்பிங் முடிந்தது
ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசுகளை வழங்கினார். பின்னர் ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் டப்பிங் பணியை தொடர்ந்தார் சிம்பு. அதையும் முடித்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

போட்டோ ஷூட்
இந்தப் படத்தை அடுத்து அவர் மாநாடு படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் நடந்துவருகிறது. தொடர்ந்து இன்னும் சில நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் உட்பட பலர் இந்த ஷூட்டிங் கலந்துகொண்டுள்ளனர்.

போட்டோ ஷூட்
இந்நிலையில் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் சிம்பு. கருப்பு சட்டை அணிந்து தாடியுடன் ஸ்டைலாக தண்ணீருக்குள் நிற்கும் அந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் அவரை வாழ்த்தி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











