»   »  விஷால் லைட்டைக் கொஞ்சம் உங்க பின்னாடி திருப்புறீங்களா?

விஷால் லைட்டைக் கொஞ்சம் உங்க பின்னாடி திருப்புறீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மூன்று நாட்கள் கழித்து தான் விமர்சனம், ஹீரோக்களை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தால் நடவடிக்கை இந்த இரண்டு அறிவிப்புகளால் விஷாலை வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஒரு நல்ல படத்தை விமர்சனங்களால் சிதைக்கவே முடியாது. பதிலாக மோசமாக எடுக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள், பில்டப் கொடுத்து ஏமாற்றும் ஈமு கோழி டைப் படங்கள்தான் விமர்சனங்களால் பாதிக்கப்படுகின்றன.

Small budget producers suggestion to Vishal

துருவங்கள் பதினாறு, மாநகரம், ஜோக்கர், நிசப்தம், எட்டு தோட்டாக்கள் ஆகியவை பெரிய ஹீரோக்கள் நடிக்காத மினிமம் பட்ஜெட் படங்கள். இவை ஓடியதற்கு காரணமே விமர்சனங்கள்தான். இது போன்ற நல்ல படங்களுக்கு மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் செய்தால் படம் தியேட்டரை விட்டே காணாமல் போயிருக்கும். எனவே விஷாலின் இந்த மூன்று நாட்கள் திட்டத்தால் பாதிக்கப்பட போவது சின்னப் படங்கள்தான் எனப் புலம்புகிறார்கள் சிறுபடத் தயாரிப்பாளர்கள்.

விமர்சனம் பக்கம் லைட்டை பாய்ச்சும் விஷால், கொஞ்சம் லைட்டை திருப்பி தங்கள் சினிமாத் துறையினரை நல்ல படங்கள் எடுக்கச் சொல்லலாமே...?

Read more about: vishal, movies, விஷால்
English summary
Small budget producers have suggested Vishal to reconsider his reviews policy for the sake small budget movies.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil