2031ல் தனுஷ் தான் சிஎம்.. ரூட்டு பக்காவா இருக்காம்.. தனுஷ் ரசிகர்களின் பலே திட்டம்!
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடிகராக இருந்த விஜய் மாறியுள்ள நிலையில், அடுத்ததாக 2031ல் நடிகர் தனுஷ் முதலமைச்சராக மாறுவார் என தனுஷ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவையே அதகளப்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை, குபேரா, தேரே இஷ்க் மே உள்ளிட்ட படங்கள் தமிழ்நாட்டில் பெரிதாக ஓடவில்லை. மேலும், அவர் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

போர் தொழில் இயக்குநர் இயக்கத்தில் தனுஷ் படம் வந்தால் நிலைமையே மாறிவிடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 'கர' படமும் காப்பாற்றாத நிலையில், அடுத்து 'ஓம்' படத்தை ரசிகர்கள் பெரிதும் நம்பிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நாங்க எல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக் கூடாதா?: நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்ததே பலருக்கும் பெரிய ஆச்சர்யத்தை அளித்தது. அதன் பின்னர், தமிழ் சினிமாவில் பல படங்களில் ரஜினிகாந்த் மேனரிசத்தையும் அவரது படங்களான படிக்காதவன், மாப்பிள்ளை, பொல்லாதவன் போன்ற டைட்டில்களிலும் நடித்து தனக்கான ரசிகர்களை உருவாக்கினார். போயஸ் கார்டனில் வீடும் கட்டிய தனுஷ் திடீரென ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்து பிரிந்தது பெரிய பஞ்சாயத்தை கிளப்பியது. ஆனால், சினிமாவில் ஹீரோவாகவும் இயக்குநராகவும் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். ஆடியோ வெளியீட்டு விழாவில் "நாங்க எல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக் கூடாதா?" என தனுஷ் பேசியது பெரிய அளவில் வைரலானது.
கொடி அறிமுகம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடி பறக்குது படத்தில் நடித்தது போலவே தனுஷ் கொடி எனும் படத்தில் நடித்து தனது அரசியல் ஆர்வத்தையும் வெளிக்காட்டினார். சமீபத்தில், தனுஷ் ரசிகர் மன்றத்துக்கான தனிக்கொடியை அறிமுகப்படுத்தியும், அடிக்கடி ரசிகர்களையும், பொதுமக்களையும் சந்தித்து நலத்திட்ட உதவிகளையும் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் தனுஷ் தனிக்கட்சி தொடங்கப்போகிறாரா என்கிற கேள்விகள் எழும்பியுள்ளன.
2031ல் முதல்வரே தனுஷ் தானாம்: இந்நிலையில், தனுஷ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தனுஷின் ஓம் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்றும் 2027ல் தமிழரசன் பச்சமுத்து மற்றும் வெங்கட் பிரபு படங்கள் உள்ளன. 2028ல் வெற்றிமாறன் உடன் வடசென்னை 2 மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி உடன் பாலிவுட் படம் உள்ளது என்கின்றனர். மேலும், 2029ல் அரசியல் கட்சியை அறிவித்து, 2030ல் 30 லட்சம் பேர் பங்கேற்கும் மிகப்பெரிய மாநாட்டை நடத்தி 2031ல் முதலமைச்சராக மாறுவார் என பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று தற்போது தனுஷ் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சுக்கள் கிளம்பியதுமே அதை அவர் மறுத்து விட்டார். இந்நிலையில், தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா? என்கிற கேள்விகள் கிளமிப் உள்ளன.


Click it and Unblock the Notifications