Rajini - சொன்ன சொல்லை காப்பாற்றவே மாட்டாரா ரஜினிகாந்த்?.. ரசிகர்கள் கேள்வி.. இது என்ன புது பஞ்சாயத்து
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே மாட்டாரா என ரசிகர்களில் ஒருதரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இந்திய அளவில் பலரை ரசிகர்களாக பெற்றிருக்கிறார் ரஜினிகாந்த். அவரது நடையிலிருந்து பேச்சுவரை அத்தனைக்கும் ரசிகர்களாக இருக்கிறார்கள் பலர். தலைவர் என்று அன்புடன் அழைத்துவருகிறார்கள். கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த அவர் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. உலகளவில் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது.

அடுத்த படங்கள்: ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு தற்போது ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஞானவேல் இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்துக்கு தலைவர் 171 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது கதை எழுதும் வேலையில் மும்முரமாக இறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ் 2024 மார்ச் அல்லது ஏப்ரலில் தலைவர் 171 படத்தின் ஷுட்டிங்கை தொடங்குகிறார். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என நம்பிக்கை இருக்கிறது ரஜினியின் ரசிகர்களுக்கு.
கடைசி படம்: அநேகமாக அந்தப் படம்தான் கடைசி படமாக இருக்கலாம் என பெரும்பாலானோர் கூறுகிறார்கள். ஆனால் அவரது ரசிகர்களோ கண்டிப்பாக இருக்காது இன்னும் சில படங்களில் எங்கள் தலைவர் நடிப்பார் என்று கூறுகின்றனர். ரசிகர்களை பொறுத்தவரை ரஜினிகாந்த்தை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எண்ணம். அந்த அளவுக்கு அவர் மீது மிகுந்த பாசத்தை வைத்திருக்கின்றனர்.
காப்பாற்றவேமாட்டாரா?: ஆனால் ஒரு தரப்பினரோ ரஜினிக்கு தனது ரசிகர்கள் மீது அக்கறையே இல்லை என்று காலங்காலமாக கூறிவருகின்றனர். அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி ரசிகர்களை ஏமாற்றியவர் அவர் என்று தொடர்ந்து கூறுகின்றனர். இந்த சூழலில் புதிய விஷயத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.
என்ன நடந்தது?: அதாவது சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தை கட்டியபோது ரஜினிகாந்த் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் இந்த மண்டபத்தில் 100 ஏழைகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது அந்த பேப்பர் கட்டிங்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி, 100 இல்லை பாஸ் 1 இலவச திருமணம்கூட நீங்கள் நடத்தவில்லையே . சொன்ன சொல்லை காப்பாற்றவே மாட்டீர்களா ரஜினி என கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











