யுவன் இசை... சோனாக்ஷி ஹீரோயின்... கமல் படம் விரைவில் ஆரம்பம்!
செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்தில் சோனாக்ஷி சின்ஹா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஏற்கெனவே நாம் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம். இப்போது அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கமலின் மனைவியாக நடிக்கிறார் சோனாக்ஷி. கமல் மகள் ஸ்ருதியை விட ஒரு வயது இளையவர் சோனாக்ஷி என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வராகவன் இயக்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது. ஹாலிவுட் படமான ஹானிபலின் ரீமேக் இந்தப் படம் என்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கமல் படத்துக்கு அவர் இசையமைப்பது இதுவே முதல்முறை.
விரைவில் படத்தில் நடிக்கும் இதர நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்து விவரம் வெளியாகும் என்று கூறியுள்ளார் படத்தின் இயக்குநர் செல்வராகவன்.
Comments


Click it and Unblock the Notifications