'சார், மாலத்தீவுக்கு வெகேஷன் போகணும்..' உதவிகேட்ட நெட்டிசன்.. நச் ரிப்ளை கொடுத்த சோனு சூட்!

By

சென்னை: மாலத்தீவு செல்வதற்காக உதவி கேட்ட நெட்டிசனுக்கு சரியான ரிப்ளை கொடுத்துள்ளார், பிரபல நடிகர் சோனு சூட்.

கொரோனா காரணமாக, கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் திடீரென லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

இதனால், பலர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். பலருக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

சிக்கிய தொழிலாளர்கள்

சிக்கிய தொழிலாளர்கள்

பலர், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் சம்பள குறைப்பை அறிவித்துள்ளன. பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். லாக்டவுன் காரணமாக பல்வேறு பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியவில்லை.

எனக்குப் போதும்

எனக்குப் போதும்

அவர்களுக்கு தனது சொந்த செலவில், தனி பேருந்துகளை அமர்த்தியும் ரயில்களை ஏற்பாடு செய்தும் அனுப்பி வைத்தவர், நடிகர் சோனு சூட். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்ட பலரை, தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து குடும்பத்துடன் சேர்த்து வைத்தார். அவர்களின் மகிழ்ச்சி எனக்குப் போதும் என்று கூறியிருந்தார் சோனு சூட்.

கல்வி கஷ்டம்

கல்வி கஷ்டம்

வெளிநாட்டில் சிக்கிய தமிழக மாணவர்களையும் விமானம் மூலம் அழைத்து வர உதவி செய்தார். அவரது செயலை இந்தியாவில் உள்ள அனைவரும் பாராட்டினர். படங்களில்வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நீங்கள்தான் ஹீரோ என்று கூறுகின்றனர். தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார். கல்விக்காக கஷ்டப்படுபவர்களுக்கும் அவர் உதவி வருகிறார்.

எக்குத்தப்பு உதவி

எக்குத்தப்பு உதவி

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர், நெட்டிசன்களின் கேள்விக்குப் பதிலளித்தும் உதவி செய்தும் வருகிறார். அவரிடம் சிலர் எக்குத்தப்பான உதவிகளை கேட்பதும் உண்டு. அதற்கு காமெடியாக பதிலளிப்பார் சோனு சுட். இப்போதும் அவரிடம் ஒருவர் அப்படி ஓர் உதவி கேட்டுள்ளார்.

 சைக்கிளா, ரிக்‌ஷாவா?

சைக்கிளா, ரிக்‌ஷாவா?

அதாவது, 'சார் எனக்கு மாலத்தீவுக்கு வெகேஷன் போகணும். கொஞ்சம் உதவி பண்ணுங்களேன்' என்று கேட்டுள்ளார். இதற்கு கிண்டலாக இந்தியில் பதிலளித்துள்ள சோனு சூட், நீங்க சைக்கிள்ல போவீங்களா, இல்லை ரிக்‌ஷாவிலயா, பாய்? என்று கூறியுள்ளார். இதை ஏராளமான நெட்டிசன்ஸ் ரீட்விட் செய்துள்ளனர்.

அருந்ததி வில்லன்

அருந்ததி வில்லன்

சோனு சூட், தமிழில் விஜயகாந்தின் கள்ளழகர் மூலம் நடிகராக அறிமுகமானவர். மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அனுஷ்காவின் அருந்ததி படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு பேசப்பட்டது. இந்தி மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள இவர், இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X