Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இப்படி ஒரு ட்ரீட்டா? உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சென்னை : தொடர்ந்து அடுத்துடுத்து ஹிட் கொடுத்து வருகிறார் சூர்யா. இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் மட்டுமல்ல கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்களும் செம ஹிட்டாகி வருகின்றன. இதனால் சூர்யா அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
டைரக்டர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தின் முலம் ஹீரோவாக அறிமுகமான சூர்யா, பல படங்களில் ரொமான்டிக் ஹீரோ, செகண்ட் ஹீரோ ரோல்களில் நடித்துள்ளார். ஆனால் அவரை ஆக்ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்தியது டைரக்டர் பாலா இயக்கிய நந்தா படம் தான்.
சூர்யாவின் திரையுலக பயணத்தில் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு பிதாமகன், காக்க காக்க, பேரழகன், வேல், சிங்கம் போன்ற படங்கள் சூர்யாவிற்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தன.
“லீலாவை
யார்
கொன்றது“..ஆவலை
தூண்டும்
விஜய்
ஆண்டனியின்
கொலை!

எதிர்ப்பை சந்தித்த சூர்யா
கொரோனாவால் சினிமா உலகமே ஸ்தம்பித்து போயிருந்த சமயத்தில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்து, ஹிட்டாக்கினார் சூர்யா. முதலில் தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் இதற்காக சூர்யாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இன்று அனைவரும் ஓடிடி பின்னால் போக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

கவனத்தை ஈர்த்த சூர்யா படங்கள்
சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து ஜெய்பீம் படமும் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.இந்த இரு படங்களும் சர்வதேச கவனத்தை ஈர்த்து, ஆஸ்கர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. அதிலும் சூரரைப் போற்று படம் 35க்கும் அதிகமான சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. படம் ரிலீசாகி 3 ஆண்டுகள் ஆனாலும் தற்போதுவரை இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வரிசையாக காத்திருக்கும் சூர்யா படங்கள்
சூரரைப் போற்று படம் தற்போது இந்தியிலும் ரீமேக் ஆகி வருகிறது. இதில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். ஏற்கனவே கமலின் விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்த ரோலக்ஸ் கேரக்டரை தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதோடு விக்ரம் 3, கைதி 2, வாடிவாசல், வணங்கான் என வரிசையாக சூர்யா படங்கள் ரசிகர்களின் ஆர்வத்தை பட மடங்காக அதிகரிக்க வைத்து வருகிறது.

சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் ஜுலை 23 ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் பல விதங்களில் பிளான் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று சூர்யா பிறந்தநாள் காமன் டிபியை பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்து வெளியிட்டனர். இது செம டிரெண்டானது. சூர்யா பிறந்தநாள் ட்ரீட்டாக வாடிவாசல், சூர்யா 42 படங்களின் அப்டேட்கள் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு ட்ரீட்டா
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களை தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் உள்ள தியேட்டர்களில் ஜுலை 22 முதல் ஜுலை 24 வரை இந்த படங்களை ரீ ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படங்களை தியேட்டர்களில் பார்த்தால் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக, புது அனுபவமாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.