சூரிக்காக இளையராஜா செய்த விஷயம்.. இத்தனை வருஷத்தில் இப்படி செஞ்சதே இல்லை

சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக விடுதலை படம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கியிருந்த அந்தப் படம் சூரிக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. இப்போது அவரது நடிப்பில் கருடன் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்தச் சூழலில் இளையராஜா குறித்து சூரி எமோஷனலாக பேசியிருக்கிறார்.

சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் பரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 பரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார்.

Soori Ilayaraaja Garudan

விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்‌ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருந்த சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது.

கருடன்: இப்போது அவரது நடிப்பில் கருடன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் சசிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. முக்கியமாக சூரியின் நடிப்பு மிரள செய்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இத்தனை வருட உழைப்புக்கு சூரிக்கு இப்போதுதான் தீனி கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. கண்டிப்பாக இனி அவரது வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும் என்று வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

சூரி பேட்டி: இதுவரை 10 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்திருக்கிறது. இந்தச் சூழலில் சூரி அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இளையராஜா குறித்து பேசிய அவர், "இளையராஜா சார் புது ஸ்டூடியோ தொடங்கிய அன்றே விடுதலை படத்துக்கான பூஜை அவரது அலுவலகத்தில்தான் நடந்தது. அப்போது ஒரு பாடலுக்கு ட்யூன் போட்டார்.

இதான் ஃபர்ஸ்ட்: அப்போது 45 வருட அனுபவத்தில் நான் இதுவரை எந்த ஹீரோவையும் அருகே உட்கார வைத்துக்கொண்டு ட்யூன் போட்டது இல்லை. உனக்கு மட்டும்தான் இது நடந்திருக்கிறது. என்ன ஹீரோ சார் ஆரம்பிக்கலாமா என கேட்டார். நெகிழ்ச்சியில் நான் அழுதுவிட்டேன். அப்போதுதான் அவர் போட்ட பாடல் வழி நெடுக காட்டு மல்லி பாடல்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X