சிவகார்த்திகேயனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் புலம்பிய நடிகை.. அடேங்கப்பா இதுவேறயா?
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் அதுகுறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல் சிபி சக்கரவர்த்தியுடன் அடுத்த படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் இப்போது டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாயை வசூலித்து மெர்சல் செய்தது. 2K கிட்ஸ் தலைமுறையினர் அவரை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். அதன் காரணமாக 90ஸ் கிட்ஸுக்கு எப்படி விஜய் ஒரு கொண்டாட்டத்துக்குரிய ஹீரோக்களில் ஒருவராக இருந்தாரோ அதேபோல் 2K கிட்ஸுக்கு சிவகார்த்திகேயன் திகழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் திரைத்துறையில் பெரும்பாலானவர்களின் பேச்சு.

அமரன்: வரிசையாக இரண்டு படங்கள் மெகா ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் பலத்த அடி வாங்கினார். அடுத்ததாக வெளியான மாவீரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்டது. முக்கியமாக சிவகார்த்திகேயனின் நடிப்பும் படத்தில் பெரிதாக பேசப்பட்டது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க; கமல் ஹாசன் படத்தை தயாரித்திருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ்: இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட்டானார் சிவா. அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முருகதாஸ் கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருக்கிறார். எனவே சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படத்தால் தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்கிறார் முருகதாஸ்.
குடும்பம்: இதற்கிடையே சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் வேலை செய்துகொண்டிருந்தபோதே தனது உறவுக்கார பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருக்கிறார்கள். ஆராதனா சினிமாவில் பாடவும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குகன் சில வருடங்களுக்கு முன்புதான் பிறந்தார். இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்புகூட அவருக்கு ஒரு மகன் பிறந்தார்.
சூரி பேட்டி: இந்நிலையில் சூரி சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், 'நானும் சிவகார்த்திகேயனும் நடித்தோம் என்றால் பெரும்பாலும் இயக்குநர் சொல்லுவது மாதிரி நடிக்கமாட்டோம். ஒருமுறை ரஜினி முருகன் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் வசனங்கள் எதுவும் சொல்லாமல் சீனின் சிச்சுவேஷனை சொன்னார். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் இயக்குநரிடம் சென்று, என்ன சார் டயலாக் என்று கேட்டார்.
அதற்கு அவரோ, எப்படியும் நான் எழுதிக்கொடுத்தத கேமரா ஆக்ஷன் சொன்ன பிறகு சிவாவும், சூரியும் பேசமாட்டார்கள். அதனால் நீ ஒன்றும் மனப்பாடம் செய்ய வேண்டாம் என்று சொன்னார். உடனே கீர்த்தியோ, சார் அப்புறம் எப்படி நான் டைமிங் பிடிக்கிறது என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். அந்த மாதிரிதான் இவ்வளவு நல்லா இங்கிலீஷ் பேச தெரிந்த உனக்கு யாருட்ட பேசனும்னு தெரியலையே என்ற வசனத்தை பேசினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











