ஒரு நாளைக்கு 20 ரூபாய் தான் சம்பளம்.. திருப்பூரில் வேலை பார்த்த அனுபவம்.. மனம் திறந்த ‘மாமன்’ சூரி!

சென்னை: இந்த வாரம் நகைச்சுவை நடிகர்களான சூரி, சந்தானம் மற்றும் யோகி பாபு இடையே பாக்ஸ் ஆபீஸில் நேரடி மோதல் உருவாகியிருக்கிறது. காமெடி நடிகர்களாக கலக்கி வரும் 3 பேரும் ஹீரோக்களாக மாறிய நிலையில், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த வாரம் யார் வெற்றிப் பெறப் போகிறார்கள் என்பதை தாண்டி யார் மக்களை அதிகம் என்டர்டெயின் பண்ணப் போறாங்க என்பது தான் முக்கியம் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மே 1ம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி குடும்பஸ்தன் படத்தை போலவே ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்த நிலையில், காமெடி நடிகர்களின் நகைச்சுவை பார்ட்டி எப்படி இருக்கும் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

Soori reveals he got 20 rupees has his first salary at Tiruppur company during Maaman promotion

சந்தானம் மற்றும் யோகி பாபு இருவரும் காமெடி படங்களையே களமிறக்க உள்ள நிலையில், சூரி கிராமத்து குடும்ப சென்டிமென்ட் படமான 'மாமன்' படத்தை களமிறக்க உள்ளார். அந்த படத்தின் புரமோஷனுக்காக பல கிராமங்களுக்குச் சென்று பேசி வரும் சூரி திருப்பூருக்குச் சென்று பேசும் போது, தான் முதன் முதலில் 20 ரூபாய்க்கு வேலை செய்ததே இந்த திருப்பூர் மண்ணில் தான் எனக் கூறியுள்ளார்.

நல்ல கைகளில் தமிழ் சினிமா: பாலிவுட், டோலிவுட் சினிமா போன்று வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் பெரிதாக இல்லை. சிவகார்த்திகேயன், சூரி, யோகி பாபு, சந்தானம், விஜய் சேதுபதி, கவின், பிரதீப் ரங்கநாதன், மணிகண்டன் என ஏகப்பட்ட பேர் கடுமையாக கஷ்டப்பட்டு உழைத்து ஹீரோக்களாக தமிழ் சினிமாவில் ஜொலிப்பதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். நடிகர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் மட்டுமே சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்க வேண்டும் என்கிற கோட்பாட்டை எல்லாம் தமிழ்நாட்டில் ரசிகர்கள் முறியடித்துள்ளனர். நல்ல நடிகர்களுக்கு சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்க தயாராக உள்ளனர். இங்கே உள்ள திறமையானவர்கள் பெரும் கஷ்டப்பட்டு வந்து இந்த இடத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Soori reveals he got 20 rupees has his first salary at Tiruppur company during Maaman promotion

20 ரூபாய் சம்பளம்: இன்று ஒரு படத்துக்கு பல கோடி ரூபாயை சம்பளமாக சூரி வாங்கி வருகிறார். ஆனால், ஆரம்பத்தில் திருப்பூரில் ஒரு கம்பெனியில் வெறும் 20 ரூபாய் தினக்கூலியாக வேலை பார்த்தேன் என திருப்பூரில் நடைபெற்ற மாமன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் உணர்ச்சி பொங்க உண்மையை பேசியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 1993ல் திருப்பூருக்கு வேலைக்கு வந்தேன். பல்லடம் ரோட்டில் ஸ்ரீ ஓம் கியூரிங்னு ஒண்ணு இருக்குது அங்கே தான் வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நாளைக்கு 20 ரூபாய் சம்பளம், ஒரு வாரத்துக்கு 140 ரூபாய் சம்பளம். என்னோட செலவுக்கு 70 ரூபாயை வைத்துக் கொண்டு வீட்டுக்கு 70 ரூபாயை அனுப்பி வைப்பேன் என்றார்.

பழசை மறக்காத சூரி: முதலாளிங்க பேரு வந்து கோவிந்தன் அண்ணன்னு ஒருத்தர் இருந்தாங்க, செல்வம் அண்ணன், பாலு அண்ணன் எப்போதுமே எங்களை நல்ல பார்த்துக்கிட்டாங்க என இத்தனை கோடி சம்பாதித்தாலும் 20 ரூபாய் சம்பளம் வழங்கியவர்களையும் முதலாளிகள் என பழசை மறக்காமல் சூரி பேசுவதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். மாமன் படத்தின் கதையே சூரியின் கதை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X