சம்பவம் செய்ய காத்திருக்கும் சூரியின் மண்டாடி.. முதல் விமர்சனம் சொன்ன பிரபலம்.. மெகா ஹிட்டாகுமா?

சென்னை: காமெடி நடிகராக இருந்த சூரி; கடந்த சில வருடங்களாகவே சக்சஸ்ஃபுல் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த மாமன், கருடன் ஆகிய இரண்டு படங்களில் கருடன் மெகா ஹிட்டாகி வசூலையும் வாரி குவித்தது.இப்போது அவர் மண்டாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் அந்தப் படம் குறித்து ஆர்.கே.சுரேஷ் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கோலிவுட்டில் அதிகம் கஷ்டப்பட்டு உயர்ந்த இடத்துக்கு வந்தவர்களில் சூரி. சினிமாவில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்த அவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் பரோட்டா காமெடி காட்சி பெரிய தீனி போட்டது. அந்த காட்சியால் ஒரே நைட்டில் ஃபேமஸான அவர்; அடுத்தடுத்து காமெடி ரோல்களில் கலக்கினார். விவேக், வடிவேலு ஆகியோரின் இடத்தை பிடிக்க முடியாவிட்டாலும் அவர்கள் அளவுக்கு பிஸியாகவே இருந்தார்.

Soori s Mandadi First Review RK Suresh Predicts a Mega Hit
Photo Credit:

கதையின் நாயகன்: இப்படிப்பட்ட சூழலில்தான் கதையின் நாயகனாக; அதுவும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டு விடுதலை படத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார். படமும் சூப்பர் ஹிட்டானது. சூரியையும் ரசிகர்கள் கதையின் நாயகனாக ஏற்றுக்கொண்டார்கள். இதனால் உற்சாகமடைந்த சூரி; அடுத்தடுத்து ஹீரோவாக நடிப்பது என்ற முடிவுக்கு வந்தார்.

Also Read
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ரொம்ப பொறுமைசாலியாம்.. அப்படியே அப்பா மாதிரி..சிக்மா ஹீரோ ஓபன் டாக்
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ரொம்ப பொறுமைசாலியாம்.. அப்படியே அப்பா மாதிரி..சிக்மா ஹீரோ ஓபன் டாக்

கருடன் மெகா ப்ளாக் பஸ்டர்: விடுதலை படத்துக்கு பிறகு வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில் நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. சர்வதேச அளவில் பெரிய கவனத்தையும் ஈர்த்தது. இருந்தாலும் வணிக ரீதியாக ஒரு ஹீரோவாக வெற்றி பெற முடியவில்லையே என்ற கவலையில் சூரி இருந்தபோதுதான்; துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்தார்.படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி பல கோடி ரூபாயை வசூலித்து கெத்து காண்பித்தது.

மண்டாடி சூரி: அந்தப் படத்தின் வணிக ரீதியான வெற்றி சூரிக்கு மேற்கொண்டு உற்சாகத்தை கொடுத்தது. கோலிவுட்டில் சூரிக்கென்று தனி மார்க்கெட்டும் ஓபன் ஆனது. அந்த உற்சாகத்தோடு அவர் நடித்த மாமன் படமும் மோசமான வசூல் இல்லை. அதேசமயம் விமர்சன ரீதியாக படம் கழுவி ஊற்றப்பட்டது. இப்போது அவர் மண்டாடி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கிறார். கூடிய விரைவில் படம் ரிலீஸாகவிருக்கிறது.

ஆர்.கே.சுரேஷ் சொன்னது: இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பங்கேற்றார். சூரியும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது பேசிய சுரேஷ், "சூரி.. உன்னுடைய அடுத்த படமான மண்டாடியிலிருந்து சில ஃபுட்டேஜுகளை பார்த்தேன். எல்ரெட் நேற்று காண்பித்தார். நீ செய்த சண்டை காட்சிகளை பார்த்து பிரமித்துவிட்டேன்.கருப்பு படம் மெகா ஹிட்டாகும் என்று சொன்னேன். அதே மாதிரி நடந்தது. இப்போது சொல்கிறேன் மண்டாடி திரைப்படமும் மெகா ஹிட்டாகும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X