நெதர்லாந்தில் சூரி.. ரோட்டர்டாம் விருது விழாவுக்கு சென்ற ஏழு கடல் ஏழு மலை.. ஆளே மாறிட்டாரே!
சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான சூரி சமீப காலமாக தனது கியரை மாற்றி கதையின் நாயகனாக மாறி கலக்கி வருகிறார். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என சொல்வது சூரி விஷயத்தில் அப்படியே நிறைவேறியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பரோட்டா சூரியாக இருந்தவர் இன்று நெதர்லாந்தில் ரோட்டர்டாம் விருது விழாவில் தனது படத்தின் திரையிடலுக்காக சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் இயக்குநர் ராம். அவர் இயக்கிய அனைத்து படங்களும் விருதுகளை குவித்து வருகிறது. ராம், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை படத்தை அவர் உருவாக்கி உள்ளார். அந்த படம் முதலில் சர்வதேச விருது விழாக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

நெதர்லாந்தில் சூரி: மதுரைக்கார பையனாக இருந்து வந்த சூரி தற்போது நெதர்லாந்தில் செம்ம சூப்பர் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழுமலை படம் இன்று ரோட்டர்டாம் விருது விழா நிகழ்ச்சியில் போட்டிக்காக திரையிடப்பட உள்ளதாகவும் ரசிகர்களின் ஆசிர்வாதம் தங்கள் படக்குழுவினருக்கு வேண்டுமென நடிகர் சூரி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
லுக்கே சூப்பரா இருக்கு: பார்க்க சூரியா அல்லது வெற்றிமாறனா என்றே தெரியாத அளவுக்கு சூரியன் லேட்டஸ்ட் லுக் செம சூப்பரா இருக்கிறது. நெதர்லாந்தில் நின்று கொண்டு பிளேசரை கைகளில் வைத்துக்கொண்டு டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் உடன் மாஸ் போஸ் கொடுத்திருக்கிறார் சூரி.

விருதுகளின் நாயகன்: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வந்த காமெடி நடிகர் சூரி தற்போது விருதுகளின் நாயகனாக மாறிவிட்டார். விடுதலை, கொட்டுக்காளி, ஏழுகடல் ஏழுமலை மற்றும் கருடன் என வரிசையாக படங்களைக் கொடுத்து தனது பழைய இமேஜை டோட்டலாக மாற்றிவிட்டார்.
விடுதலை 2 அப்டேட் : சூரியை புதிய தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் கலக்குங்க அண்ணா என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். விடுதலை 2 படம் குறித்த அப்டேட்டை சொல்லுங்க அண்ணா என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் உடன் இணைந்து காமெடியில் கலக்கிய சூரி விரைவில் சிவகார்த்திகேயன் உடன் தனது படத்தையே கிளாஷ் விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











