ஃபுல் பார்மில் இருக்கும் சூரி.. அடுத்து நடிக்கவிருக்கும் வெப் சீரிஸின் கதை இதுவா?.. இயக்குநர் யார் தெரியுமா?

சென்னை: சூரி இப்போது கதையின் நாயகனாக பிஸியாக நடித்துவருகிறார். காமெடி ரோலில் கலக்கிவந்த அவர் ஹீரோவாகவும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக விடுதலை 2 படம் வெளியானது. அந்தப் படத்தில் சூரிக்கான காட்சிகள் முதல் பாகத்தை விடவும் கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் பக்கா மாஸ் சீன்கள் எல்லாம் இருக்கின்றன. இப்போது மாமன் என்கிற படத்தில் நடித்துவருகிறார் அவர். இந்தச் சூழலில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகவிருக்கிறது.

சினிமாவுக்குள் வந்து ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தவர் சூரி. அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய வெண்ணில கபடி குழு படத்தில் புரோட்டா காமெடி சீனில் நடித்து அடையாளப்பட்டார் அவர். அந்தப் படம் கொடுத்த வெளிச்சத்துக்கு பிறகு கோலிவுட் இயக்குநர்களின் கவனம் இவர் பக்கம் திரும்பியது. பலரும் தங்களது படங்களில் காமெடி ரோலுக்கு அவரை புக் செய்தார்கள். அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தன்னுடைய திறமையை அருமையாக வெளிப்படுத்தி தனக்கான தனியிடம் ஒன்றை தக்க வைத்துக்கொண்டார்.

Soori Will Act in Web Series Here are Full Details

கதையின் நாயகன்: தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்துவந்த அவரை வெற்றிமாறன் கதையின் நாயகனாக மாற்றினார். அந்தவகையில் கடந்த வருடம் வெளியான விடுதலை திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக அறிமுகமானார். காமெடி ரோலில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை எப்படி சரியாக பயன்படுத்தினாரோ அதேபோல் கதையின் நாயகனாக கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்தினார். ஆக்‌ஷன் காட்சிகள், இறுக்கமான காட்சிகள், காதல் காட்சிகள் என விடுதலையில் அவ்வளவு அழகாக ஸ்கோர் செய்திருந்தார் அவர்.

மெகா ஹிட் கருடன்: அந்தப் படத்துக்கு பிறகு பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்திலும் நடித்தார். இவற்றில் கொட்டுக்காளி விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்றது. கருடன் படமோ விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக நல்ல முறையில் வசூலும் செய்தது. இதனால் சூரி இனி காமெடி ரோலில் நடிக்கமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. அவரும் அதை தெரிவித்துவிட்டார்.

Soori Will Act in Web Series Here are Full Details

விடுதலை 2: அவரது நடிப்பில் கடைசியாக விடுதலை 2 படம் வெளியானது. முதல் பாகம் போல் இந்த பாகத்தில் அவருக்க அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் அவருக்கென்று மாஸ் சீன்களை வைத்திருக்கிறார் வெற்றிமாறன். முக்கியமாக க்ளைமேக்ஸில் சேத்தனை அவர் தாக்கும் காட்சியில் தியேட்டர்களில் விசில் பறந்தது. விடுதலை 2 படத்தை முடித்திருக்கும் அவர் தற்போது மாமன் என்ற படத்தில் நடித்துவருகிறார். அதனை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்கிவருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார்.

சூரி பற்றிய புதிய தகவல்: இந்நிலையில் சூரி பற்றி புதிய தகவல்ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தனது தந்தையான முத்துசாமி பற்றிய பயோபிக்கில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது படமாக உருவாகாமல் வெப் சிரீஸாக உருவாகும் என்றும்; இதனை முதலில் சூரிதான் இயக்கவிருந்தார்; ஆனால் அது ஒத்துவராது என்று அவர் முடிவெடுத்ததன் காரணமாக அந்த வெப் சீரிஸை தயாரிக்க மட்டுமே முடிவு செய்திருக்கிறாராம். மேலும் அதனை மதயானைக்கூட்டம், ராவண கோட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாறனை இயக்க வைக்கும் ஐடியாவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய் சேதுபதி ஒரு பேட்டியில், 'சூரியின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களையே படங்களாக எடுக்கலாம். அவருக்குள்ளும் ஒரு அற்புதமான இயக்குநர் இருக்கிறார்' என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X