எவ்வளவு கஷ்டம்.. தண்ணீர் மட்டுமே குடித்த காலம் உண்டு.. சூரி சொத்து மதிப்பு இப்போ எவ்வளவு தெரியுமா?

சென்னை: காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சூரி கதையின் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். காமெடி நடிகராக மட்டும் வலம் வந்த சூரி விடுதலை படத்தில் கதையின் நாயகனாகவும்; கருடன் படத்தில் கதாநாயகனாகவும் மாறினார். அவரது நடிப்பில் கடைசியாக கொட்டுக்காளி படம் வெளியானது. படத்தை ஒருதரப்பினர் கொண்டாடுகிறார்கள்; ஒருதரப்பினர் புரியவில்லை என்கிறார்கள். ஆனால் சூரியின் நடிப்பை அனைவருமே கொண்டாடுகிறார்கள். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அடையாளப்பட்ட சூரி தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார். அதன் காரணமாக முன்னணி காமெடி நடிகர் என்ற இடத்துக்கும் நகர்ந்தார். அஜித், விஜய், ரஜினி, சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் அவர் செய்த காமெடிகள் சமயங்களில் ரசிக்கப்படாமலும்; சமயங்களில் ரசிக்கப்பட்டும் இருக்கின்றன. சூழல் இப்படி இருக்க இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் சூரியை கதையின் நாயகனாக மாற்றினார்.

soori kottukkaali viduthalai

விடுதலை: வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான விடுதலையில் சூரி கதையின் நாயகனாக அறிமுகமாகி; தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருந்தார். சண்டைக்காட்சிகளில் எடுத்திருந்த ரிஸ்க், உடல்மொழி என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்கிய அவர் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார் என்று ரசிகர்கள் அவரை உச்சி முகர்ந்து கொண்டாடினர். எனவே இனி சூரி கதையின் நாயகனாகவே பயணப்படுவார் என்று ஆரூடமும் கூறப்பட்டது.

கருடன்: அதன்படியே அவரது நடிப்பில் அடுத்ததாக கருடன் படம் வெளியானது. துரை செந்தில்குமார் இயக்கியிருந்த அந்தப் படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. முக்கியமாக சூரியின் நடிப்பு அசுர பாய்ச்சலில் இருப்பதாகவும்; இத்தனை வருடங்கள் பட்ட கஷ்டத்துக்கு சூரிக்கு இப்போதுதான் தீனி கிடைக்க ஆரம்பித்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறினார்கள். மேலும் இனி கதையின் நாயகனாகவே தொடர்வேன் என்று சூரியும் கூறியிருக்கிறார்.

கொட்டுக்காளி: அதன்படி அவர் அடுத்து நடித்த படம் கொட்டுக்காளி. பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் சினிமா ரசிகர்களில் ஒருதரப்பினரால் கொண்டாடப்படுகிறது. அதேசமயம் மற்றொரு தரப்பினரோ படம் புரியவே இல்லை என்று சொன்னார்கள். மேலும் விமர்சன ரீதியாக பெருவாரியாக படம் கொண்டாடப்பட்டாலும் வசூல் ரீதியாக கொஞ்சம் டல்லடிப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக பிரசாத் முருகேசன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் விடுதலை 2, ஏழு கடல் ஏழு மலை படங்களும் ரிலீஸாகவிருக்கின்றன.

சூரியின் சொத்து மதிப்பு: இந்நிலையில் சூரி இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 50லிருந்து 60 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சென்னையில் இரண்டு வீடுகளும், சொந்தமாக இடங்களும் வைத்திருக்கும் சூரியிடம் மூன்று சொகுசு கார்கள் இருக்கின்றன. மேலும் மதுரையில் சொந்தமாக இரண்டு ஹோட்டல்களையும் நடத்திவருகிறார். அதன் மூலமும் சூரிக்கு வருமானம் வருகிறது.

soori kottukkaali viduthalai

சினிமாவுக்கு வந்த புதிதில் சாப்பாட்டுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டவர் சூரி. கையில் பணம் இல்லாததால் சாப்பிடாமல் தண்ணீரை மட்டுமே குடித்து சூரி வாழ்ந்த நாட்கள் எல்லாம் உண்டு. அதுமட்டுமின்றி கலாபக் காதலன் படத்தின் ஆடிஷனுக்கு சென்றபோது பசி மயக்கத்தில் சுருண்டு கீழேயும் விழுந்தார். ஆனால் சினிமாவில் வென்றே தீர வேண்டும் என்ற வெறி மட்டும் அவருக்கு அடங்காததால் இன்று தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஜொலித்துக்கொண்டிருக்கும் சூரிக்கு தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X