டிரெண்டாகும் விஜய்சேதுபதி மகள் #SreejaVijaySethupathi ஹாஷ்டேக்.. ’முகிழ்’ பட டீசர் ரிலீஸ்!

சென்னை: நடிகர் விஜய்சேதுபதியின் செல்ல மகள் ஸ்ரீஜா நடிப்பில் உருவாகி உள்ள முகிழ் படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில், #SreejaVijaySethupathi ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

விஜய்சேதுபதி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதன் இயக்கி உள்ள புதிய திரைப்படம் முகிழ்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி, ரெஜினா கசாண்ட்ராவுடன் விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம்

கடந்த மாதம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி என மூன்று திரைப்படங்கள் வெளியாகின. லாபம் திரைப்படம் மட்டுமே அதில் திரையரங்கில் வெளியானது மற்ற இரு படங்களும் ஒடிடியில் வெளியாகின. இந்நிலையில், விஜய்சேதுபதி நடித்துள்ள மற்றொரு படம் இந்த மாதம் வெளியாகிறது.

முகிழ் டீசர் ரிலீஸ்

முகிழ் டீசர் ரிலீஸ்

இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள விஜய்சேதுபதியின் முகிழ் படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய்சேதுபதி தயாரித்துள்ள இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஜய்சேதுபதி மகள்

விஜய்சேதுபதி மகள்

விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா இந்த படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ள நிலையில், #SreejaVijaySethupathi என்ற ஹாஷ்டேக்கை போட்டு விஜய்சேதுபதி ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஸ்ரீஜாவை வாழ்த்தி வருகின்றனர். முகிழ் டீசரின் ஆரம்பத்திலேயே ஸ்ரீஜாவை தான் காட்டுகின்றனர்.

Recommended Video

Shoba போல் இருந்ததால் SAC வாய்ப்புக்கொடுத்தார் | Actress Keerthana | Rewind Raja | Filmibeat Tamil
அப்பாவுடன்

அப்பாவுடன்

இந்த படத்தில் இருவரும் அப்பா மகளாகவே நடித்துள்ளனர். ஸ்கூபி (Scooby Doo) எனும் நாய்க் குட்டியின் சேட்டையை அப்பா விஜய்சேதுபதி கண்டிப்பது போல இந்த டீசர் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி சீருடையில் செல்ல நாய்க்குட்டியை கட்டுப்படுத்த முடியாத சிறுமியாக ஸ்ரீஜா நடித்துள்ளார்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

வரும் அக்டோபர் 8ம் தேதி திரையரங்குகளில் விஜய்சேதுபதி, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் விஜய்சேதுபதியின் மகள் நடித்துள்ள முகிழ் படம் வெளியாகிறது. இந்த படத்தின் நீளம் வெறும் 62 நிமிடங்கள் மட்டுமே என்பதையும் படக்குழுவினர் டிரைலர் வெளியாகி உள்ள திங்க் மியூசிக் இந்தியா பக்கத்திலேயே வெளியிட்டுள்ளனர்.

பழைய மக்கள் செல்வனா வரணும்

பழைய மக்கள் செல்வனா வரணும்

முகிழ் படத்தின் டீசரை பார்த்து பாராட்டி வரும் விஜய்சேதுபதி ரசிகர்கள், விஜய்சேதுபதி நீங்க வரணும் பழைய மக்கள் செல்வனா வரணும் என கமெண்ட்டுகளை போட்டு கம்பேக் கொடுக்க கூறி வருகின்றனர். கடந்த மாதம் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளராக எல்லாம் விஜய்சேதுபதி வருவாரா? என மீம் க்ரியேட்டர்கள் கலாய்த்து இருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X