திருமண பந்தத்தில் ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த் புதுச்சேரியை சேர்ந்த மாடலான வந்தனாவை திருமணம் செய்து கொள்ள போகிறார்.
இயக்குனர் சசியின் ரோஜாக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். முதல் படத்திலே தனது முத்தான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக பெண்களை மிகவும் கவர்ந்தார்.ரோஜாக் கூட்டம் வெற்றியை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு என அடுத்தடுத்து வெற்றி படத்தை கொடுத்தார் ஸ்ரீகாந்த்.
ஆனால் அதன் பின்னர் ஸ்ரீகாந்தின் படங்கள் சரியாக போணியாகவில்லை. தற்போது டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் எம்எம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தனது முந்தைய தேல்வி படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என ஸ்ரீகாந்த் நம்பிக்கையுடன் உள்ளார்.
இந் நிலையில் புதுச்சேரியை சேர்ந்த மாடலான வந்தனாவை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்கவுள்ளார் ஸ்ரீகாந்த். வந்தனா ஆஸ்திரேலியாவில் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இவர்களது திருமணம் வருகிற ஜூன் 18ம் தேதி நடைபெறவுள்ளது.
Comments
எம்எம் தமிழ் சினிமா திருமணம் புதுச்சேரி மாடல் அழகி வந்தனா ஸ்ரீகாந்த் hero june kollywood mm model girl srikanth vandhana wedlock


Click it and Unblock the Notifications