ஹீரோ .. ஹீரோ ..

By Staff

எப்போ கல்யாணம் என்று கேட்டால், நான் சின்னப் பையன்தானே, எனக்கென்ன அவசரம் என்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.

தமிழ் சினிமாவில் ரசிகைகளுக்குப் பிடித்த ஹீரோக்களில் ஸ்ரீகாந்தும் ஒருவர். முதல் படம் ரோஜாக்கூட்டம் ஹிட்டானதிலிருந்து ஸ்ரீகாந்திற்குஎன ஒரு ரசிகை கூட்டம் இருக்கிறது. அதற்கு அவரது அப்பாவித்தனமான முகமும் காரணமாக இருக்கலாம்.

அவருக்குக் கிடைத்த வேடங்களும் அத்தகையவையே. ஆனால் காதல், குடும்பம் என்று நடித்துக் கொண்டிருந்தவர் ஆக்ஷன் ஹீரோவாகஆசைப்பட்டு ஜூட், போஸ் ஆகிய படங்களில் நடித்தார்.

மிகவும் ரிஸ்க் எடுத்து இவர் நடித்த இந்த இரு படங்களும் சரியாகப் போகவில்லை. இதனையடுத்து மீண்டும் காதல் படங்களுக்கேதிரும்பியுள்ளார் ஸ்ரீகாந்த்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது,

காதல் படங்களில் நடிக்க மட்டுமே லாயக்கு என்று எனக்கு ரசிகர்கள் முத்திரை குத்திவிடுவார்களோ என்று பயந்துதான் நான் ஆக்ஷன்படங்கள் பண்ண ஆரம்பித்தேன்.

ஜூட், போஸ் இரண்டு படங்களிலும் டூப் போடாமல் எல்லாக் காட்சிகளையும் ரிஸ்க் எடுத்து நானே நடித்தேன். ஆனால் அவை சரியாகப்போகவில்லை.

அதனால் மீண்டும் காதல் படங்கள் பக்கம் வந்துள்ளேன். இனிமே ஆக்ஷன் படங்களே பண்ண மாட்டேன் என்று நான் கூறவில்லை.

எதிர்காலத்தில் நேரமும், கதையும் சரியாக அமைந்தால் மறுபடியும் அடிதடி வேடங்களைப் பண்ணுவேன்.

சதுரங்கம் படம் முடிந்து விட்டது. இந்த மாதம் திரைக்கு வருகிறது. இப்போது நடித்து வரும் கனாக்கண்டேன் ஒரு வித்தியாசமான படம்.நிச்சயம் இப்படம் வெற்றி பெறும்.

அடுத்து பம்பரக் கண்ணாலே என்று ஒரு காமெடி படத்தில் நடிக்கிறேன். ஸ்ரீகாந்துக்கு காமெடியும் வரும் என்பதை இந்தப் படத்தில்நிரூபிப்பேன்.

இதுதவிர, லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.

இதுவரை வாடகை வீட்டில் தான் குடியிருந்தேன். இப்போதுதான் வடபழனியில் ஒரு வீடு வாங்கியுள்ளேன்.

கல்யாணம் இப்போதைக்கு இல்லை. ஏன்னா நான் சின்னப் பையன்தானே என்றார் ஸ்ரீகாந்த்.

அது சரி!


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X