ஹீரோ .. ஹீரோ ..

By Staff

ஆக்ஷன் படங்கள் அடுத்தடுத்து அடி வாங்க ஆரம்பித்ததால், பழையபடி மென்மையான, காதல் கதைகளில் நடிக்கப் போகிறாராம் ஸ்ரீகாந்த்.

ரோஜாக் கூட்டத்தில் ஆரம்பித்து காதல் படங்கள், குடும்பப் படங்களில் நடித்து வந்த ஸ்ரீகாந்த் திடீரென ஆக்ஷனில் குதித்தார்.

ஜூட், வர்ணஜாலம், போஸ் என தொடர்ந்து அவர் நடித்த ஆக்ஷன் படங்கள் பெரும் அடி வாங்கிவிட்டன. போஸ் படத்தில் அவரது நடிப்பும் ஆக்ஷனும் பாராட்டப்பட்டாலும் வினியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை.

முதல் இரு வாரங்களுடன் ஏ சென்டர்களிலேயே படம் தூங்க ஆரம்பித்தது. பி, சி சென்டர்களில் ஸ்ரீகாந்துக்கு பெரிய மார்க்கெட் இல்லை.

இதனால் இப்போதைக்கு ஆக்ஷனுக்கு மூட்டை கட்டிவிட்டு மீண்டும் பழையபடி மென்மையான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

பார்த்திபன் கனவு படத்தைக் கொடுத்த கரு. பழனியப்பனின் இயக்கத்தில் இவர் நடித்த சதுரங்கம் படம் முடிந்து விட்டது. ஆனால், முந்தைய படங்கள் தொடர்ந்து ஏமாற்றிவிட்டதால் இந்தப் படத்தை வாங்க வினியோகஸ்தர்களிடையே பெரிய அளவில் ஆர்வம் இல்லை.

கே.வி. ஆனந்த் இயக்கும் கனா கண்டேன் படத்தில் நடித்து வரும் ஸ்ரீகாந்த், அடுத்து பாசில் இயக்கத்தில் ஒரு படம் செய்யப் போகிறார். மலையாளத்தில் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் பாசிலின் புதிய தமிழ் முயற்சி இது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இளையராஜாவின் அண்ணன் மகன் பார்த்தி பாஸ்கர் இயக்கும் முதல் படத்திலும் ஸ்ரீகாந்த் தான் ஹீரோ. இப் படத்திற்கு பம்பரக் கண்ணாலே என்று பெயரிட்டுள்ளார்கள்.

மேலே சொன்ந எந்தப் படத்திலும் ஸ்ரீகாந்துக்கு ஆக்ஷன் ரோல் கிடையாது என்பதை நினைவில் கொள்க.

ஸ்ரீகாந்த் பற்றி பேசிவிட்டு அவரது மனம் நிறைந்த ஸ்னேகா பற்றி ஒரு வரி கூட சொல்லாவிட்டால் நீங்கள் கோபித்துக் கொள்வீர்களே.

தமிழில் மார்க்கெட் சரிய ஆரம்பித்துவிட்டதால் மீண்டும் தெலுங்குப் படங்களுக்கு ஓகே சொல்ல ஆரம்பித்திருக்கும் ஸ்னேகா இப்போது அஙகு ஒரே நேரத்தில மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X