ஹீரோ .. ஹீரோ ..
லவர் பாயாக நடித்து போரடித்துவிட்டதாம் ஸ்ரீகாந்துக்கு. இதனால் அடுத்து ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க முடிவுசெய்துள்ளார்.
அந்தப் படத்தின் பெயர் ஜூட். டும்..டும்..டும்... படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த அழகம் பெருமாள் தான்இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் மணிரத்னத்தின் சிஷ்யர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னத்தைப் போலவே எதையும் மிக சீரியசாக செய்பவர் அழகம் பெருமாள். இதனால் ஆக்ஷன் ஹீரோவாகநடிக்கும் முன் முதலில் ஸ்ரீகாந்தின் உடலை அதற்கேற்ப மாற்றும் வேலையில் இறங்கியுள்ளார் பெருமாள்.
உடம்பைஒரு 6 கிலோ ஏற்றச் சொல்லிவிட்டா பெருமாள், அத்தோடு பாடியையும் கச்சிதமாக்கச் சொல்லியிருக்கிறார்.
இதை வேத வாக்காக எடுத்துக் கொண்டுள்ள ஸ்ரீகாந்த் வீட்டிலேயே ஒரு ஜிம்மை வைத்து இரவும் பகலுமாகஅதில் வொர்க் அவுட் செய்து வருகிறாராம். உடம்பு நல்லா திமிசு கட்டை மாதிரி மாறிய பிறகு தான் சூட்டிங்காம்.ஸ்ரீகாந்த் செய்து வரும் உடற் பயிற்சிகளை ஒரு பயிற்சியாளரின் துணையோடு கண்காணித்தும் வருகிறார் அழகம்பெருமாள்.இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடி மீரா ஜாஸ்மீனாம்.
பார்த்திபன் கனவு படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு ஸ்ரீகாந்த் மனதில் புதிய தெம்பு பிறந்திருக்கிறது. இப்போதுஉடம்பிலும் தெம்பை ஏற்றிக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











