அம்மா, அப்பாவை பெருமைப்பட வைத்த ஸ்ரீகாந்த் மகன்.. பள்ளியில் அவருக்கு கிடைத்த சூப்பர் கெளரவம்!
சென்னை: ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீகாந்தை பெருமைப்பட வைத்துள்ளார் அவரது மகன் அஹில் ஸ்ரீகாந்த். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தாலும் தனது மகனுக்காக பள்ளியில் ஒன்றாக இணைந்த தருணம் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.
நடிகர் மாதவனின் மகன் நீச்சல் போட்டிகளில் கலந்துக் கொண்டு பதக்கங்களை வாங்கி குவித்து தந்தைக்கு பெருமை சேர்த்து வருகிறார். சூர்யாவின் மகன் தேவ் கராத்தே போட்டியிலும், அவரது மகள் தியா ஆவணப் படத்தை இயக்கியும் பெற்றோர்களை பெருமைப்படுத்தினர்.

இந்நிலையில், தற்போது அப்பா ஸ்ரீகாந்த் மற்றும் அம்மா வந்தனாவை பெருமைப்படுத்தும் விதமாக அஹிலுக்கு பள்ளியில் பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. அந்த சந்தோஷத்தை வந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் கைது: ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, மனசெல்லாம், போஸ், நண்பன் என ஏகப்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஏகப்பட்ட ரசிகைகளும் உள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு போதைப் பொருள் வழக்கில் திடீரென அவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த குடும்பத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் ஸ்ரீகாந்த் என கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

பெருமைப்பட வைத்த மகன்: அப்பா ஸ்ரீகாந்த் கைதுக்கு பிறகு மகனுக்கு பள்ளியில் எந்தளவுக்கு அழுத்தம் இருந்திருக்கும் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக அனைத்தையும் கடந்து படிப்பில் கவனம் செலுத்தி தற்போது பள்ளியிலேயே முதல் மாணவன் என்கிற பொறுப்பை பெற்று அப்பா ஸ்ரீகாந்தை பெருமைப்பட வைத்துள்ளார் அஹில்.
சந்தோஷத்தில் அம்மா: தனது மகன் சிஷ்யா எனும் பள்ளியில் படித்து வரும் நிலையில், அந்த பள்ளியின் 'Head Boy' (தலைமை மாணவன்) என்கிற பெருமையை பெற்ற நிலையில், அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். நடிகர் ஸ்ரீகாந்தின் ரசிகர்கள் மற்றும் வந்தனாவின் நண்பர்கள் பலரும் அஹிலை வாழ்த்தியும் பாராட்டியும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











