ஹீரோ .. ஹீரோ ..

By Staff

ஸ்னேகாவுடன் சேர்ந்து நடித்த ஏப்ரல் மாதத்தில் ஊத்திக் கொண்டாலும் ஸ்ரீகாந்த் நம்பிக்கையுடன் தான் இருக்கிறார். திரிஷாவுடன் சேர்ந்துஇவர் நடித்த மனசெல்லாம் படப் பிடிப்பு முடிந்துவிட்டது.

ரீ-ரெக்கார்டிங் மற்றும் பைனல் டச்கள் தான் பாக்கி. பிப்ரவரியில் ரிலீசாகப் போகும் இப் படம் தனக்கு பிரேக் தரும் என்று நம்புகிறார்ஸ்ரீகாந்த்.

இவரை வைத்து ரோஜாக் கூட்டம் படத்தைத் தயாரித்த அதே ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்.

இசையில் கலக்கி எடுத்திருக்கிறாராம் இளையராஜா.

சாப்ட்வேர் காதல்:

அதே போல இன்னொரு சுமார் படமான பைப் ஸ்டாரில் நடித்த பிரசன்னாவுக்கு மீண்டும் ஒரு சான்ஸ் கிடைத்துள்ளது. இப்போது காதல்டாட் காம் என்ற படத்தில் பிரசன்னா நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடி ஆந்திராவைச் சேர்ந்த சுருதிராஜ். இவர் சில தெலுங்குப் படங்களில் நடித்திருந்தாலும் எதுவுமே ஓடவில்லை.

இப்போது தமிழைத் தான் நம்பியிருக்கிறார். இரு சாப்ட்வேர் வாலிபர்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான காதல் தான் கதையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X