'எஸ்.ஆர்.கே' பெயரை டிரேட்மார்க் செய்த ஷாருக்கான்!

பாலிவுட் உலகில் எஸ்.ஆர்.கே என்றால் பிரபலம். அது ஷாருக்கின் தனி அடையாளம். கடந்த சில ஆண்டுகளாக பிரபல பிராண்டுகளின் பெயர்களுக்கு டிரேட்மார்க் அனுமதி, அளிக்கப்படுகிறது. அதேபோல் தனது 'எஸ்.ஆர்.கே' என்ற இனிசியலுக்கு காப்புரிமை கேட்டிருக்கிறார் ஷாருக்கான். இதேபோல இன்ஷியலுக்கு அனுமதி கேட்டுள்ள மற்றொரு பிரபலம் சச்சின் டெண்டுல்கர். 'எஸ்.ஆர்.டி' என்ற பெயரை டிரேட்மார்க் ஆக மாற்ற விண்ணப்பித்துள்ளாராம்.
ஏற்கனவே ரோஜர் பெடரர், மைக்கேல் ஜோர்டன், ஜெனிபர் லோபஸ் ஆகியோரின் பெயர்களுக்கு டிரேட்மார்க் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications