உலகின் இரண்டாவது பணக்கார நடிகர் ஷாருக்கானாமே!
நியூயார்க்: உலகின் இரண்டாவது பெரிய பணக்கார நடிகர் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெற்றுள்ளார்.
வெல்த் எக்ஸ் நிறுவனம் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்களில் பணக்காரர்களாக உள்ளவர்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் தான்.
அந்த பட்டியலின் விவரத்தை பார்ப்போம்,

ஜெர்ரி
ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான ஜெர்ரி சீன்ஃபீல்டு தான் உலகின் பணக்கார நடிகர் ஆவார். அவரின் சொத்து மதிப்பு 820 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

ஷாருக்கான்
உலகின் இரண்டாவது பணக்கார நடிகர் ஷாருக்கான். நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர் என்று பல முகம் கொண்ட ஷாருக்கின் சொத்து மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

டாம் க்ரூஸ்
ஹாலிவுட் ஹீரோ டாம் க்ரூஸ் உலகின் மூன்றாவது பணக்கார நடிகர். அவரிடம் 480 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

ஜானி டெப்
ஹாலிவுட் நடிகர்களான டெய்லர் பெர்ரி மற்றும் ஜானி டெப் ஆகியோர் உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் 4 மற்றும் 5வது இடத்தை பிடித்துள்ளனர். அவர்கள் இருவரிடமும் தலா 450 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

டாம் ஹேன்க்ஸ்
ஹாலிவுட் நடிகர்களான ஜாக் நிக்கோல்சன்(400 மில்லியன் டாலர்), டாம் ஹேன்க்ஸ்(390 மில்லியன் டாலர்) மற்றும் கிளின்ட் ஈஸ்ட்வுட்(370 மில்லியன் டாலர்) ஆகியோர் 6, 7 மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











