ஐபிஎல் தொடக்க விழா-நாக்க மூக்க, அப்படிப் போடு பாடல்களுக்கு ஷாருக் நடனம்

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணிக்கு 4வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு கண்கவர் விருந்து படைக்கவுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் ஷாருக் கான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஓனரான ஷாருக், தொடக்க விழாவில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறார்.
இந்திப் பாடல்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்ப் பாடல்களுக்கும் ஷாருக் இடுப்பசைக்கவுள்ளார். அவருடன் சேர்ந்து ஆடப் போவது தென்னிந்திய நடிகை ஷ்ரியா.
இவர்களுக்காக சில தமிழ்ப் பாடல்களை தேர்வு செய்துள்ளனர். உலகத் தமிழர்கள் அத்தனை பேரையும் படு வேகமாக சென்றடைந்த படு பாப்புலரான நாக்கமூ்க்க பாடலுக்கு ஷாருக் கான் டான்ஸ் ஆடவுள்ளார்.
அதேபோல விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றான அப்படிப் போடு போடு பாடலுக்கும் ஷாருக் நடனமாடவுள்ளார். இது போக சில இந்திப் பாடல்களுக்கும் நடனமாடுகிறார் ஷாருக் கான்.
ஷாருக் கானுக்கான நடன வடிவமைப்பை கணேஷ் ஹெக்டே என்ற டான்ஸ் மாஸ்டர் கவனித்துள்ளார்.
தொடக்க விழாவை, சினியுக் நிறுவனத்துடன் இணைந்து விஸ்கிராப்ட் மேற்கொள்ளவுள்ளது.
ஷாருக் கான் மைதானத்திற்குள் ராணுவ டாங்கில் அழைத்து வரப்படவுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.


Click it and Unblock the Notifications











