இஃப்தார் நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்த எலியும், பூனையுமான சல்மான் கான், ஷாருக்கான்
மும்பை: எலியும், பூனையுமாக இருந்து வரும் பாலிவுட் நடிகர்கள் சல்மான் கானும், ஷாருக்கானும் இஃப்தார் நிகழ்ச்சியில் கை குலுக்கி, கட்டிப்பிடித்துள்ளனர்.
சல்மான் கான் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் கத்ரீனா கைப். கடந்த 2008ம் ஆண்டு நடந்த அவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் நடிகர்கள் சல்மான் கானும், ஷாருக்கானும் மோதிக் கொண்டனர்.
அதில் இருந்து சல்மானும், ஷாருக்கும் எலியும், பூனையுமாக உள்ளனர்.

பகைவர்கள்
சல்மானும், ஷாருக்கும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்தனர். அப்படியே ஒரே இடத்திற்கு வர வேண்டி இருந்தால் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றனர்.

இஃப்தார் நிகழ்ச்சி
காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கீ மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு அவர் சல்மான் மற்றும் ஷாருக்கானை அழைத்திருந்தார்.

கட்டித்தழுவல்
இஃப்தார் நிகழ்ச்சியில் சல்மான் ஷாருக்கானின் முதுகில் தட்டிக் கொடுத்துள்ளார். உடனே ஷாருக் சல்மானை கட்டித்தழுவியுள்ளார்.

அனைவருக்கும் மகிழ்ச்சி
எலியும், பூனையுமான சல்மானும், ஷாருக்கும் கட்டித் தழுவியது இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது.


Click it and Unblock the Notifications











