'சென்னை' வசூலை முந்தட்டும் 'சிங்கம் 2'... ஷாருக் பெருந்தன்மை!
மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் வசூல் சாதனையை சிங்கம் 2 படம் முந்தட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் ஷாருக் கான்.
அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் 2 விரைவில் திரைக்கு வரவுள்ளது.
ஏற்கனவே சிங்கம் இந்திப் பதிப்பு பெரும் வசூலைக் குவித்தது. அதாவது ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியது என்பதால் 2ம் பாகத்தின் வசூல் குறித்தும் எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழ்ச் சிங்கத்தின் இந்தி கர்ஜனை
சூர்யா நடிப்பி்ல் உருவான சிங்கம் படத்தைத்தான் அதே பெயரில் இந்தியில் அஜய் தேவ்கனை வைத்து இயக்கினர் ரோஹித் ஷெட்டி.

2011ம் ஆண்டின் சூப்பர் ஹிட்
பாஜிராவ் சிங்கம் என்ற பெயரில் இப்படத்தில் மிரட்டியிருந்தார் தேவ்கன்.

மன்மோகன் சிங்கம்
இந்தப் படத்தின் ஸ்டில்களை வைத்து மன்மோகன் சிங்கைக் கிண்லடித்து வீடியோவும், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி அப்போது பெரும் சலசல்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

இப்போது சிங்கம் 2
தற்போது தமிழில் சிங்கம் 2 வெளியானதைத் தொடர்ந்து இந்தியிலும் 2ம் பாகத்தை உருவாக்கியுள்ளனர்.

சென்னை எக்ஸ்பிரஸ் வசூலை முறியடிக்குமா?
தற்போது ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் பெரும் வசூலைக் குவித்து வருகிறது. இதுவரை ரூ. 200 கோடி வரை வசூலித்து விட்டது. இந்த வசூலை சிங்கம் 2 முறியடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஷாருக்கானின் வாழ்த்து
இந்த நிலையில்தான் சிங்கம் 2 படம் பெரும் வசூலை அள்ளட்டும், சென்னை எக்ஸ்பிரஸ் சாதனையை முறியடிக்கட்டும் என்று ஷாருக்கே வாழ்த்தியுள்ளார்.

''முந்தி வா சிங்கம்''
இதுகுறித்து ஷாருக் கான் கூறுகையில், கடவுள் அருளால்,ரோஹித் ஷெட்டியின் சிங்கம் 2 நன்றாக ஓடி, சென்னை எக்ஸ்பிரஸை விட நன்றாக ஓடி வசூலை பெறட்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கான முழுத் தகுதியும் சிங்கம் 2படத்துக்கு உண்டு என்றார்.

சென்னை எக்ஸ்பிரஸ் இயக்குநரும் ஷெட்டிதான்
ரோஹித் ஷெட்டிதான், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











