மாஸ் ஹீரோக்களின் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைல்
இப்போதெல்லாம் 20 வயதிலேயே இளநரை எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிடுகிறது.
அந்த நரையை மறைக்க கலரிங்... ஹேர் டை என மாறிவிடுகின்றனர் இளசுகள். ஆனால் கொஞ்சம் நரை... கொஞ்சம் கறுப்பு என சால்ட் அன் பெப்பர் ஸ்டைலில் அசத்துகின்றனர் மாஸ் ஹீரோக்கள்.
தல அஜீத், தனது மங்காத்தா படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் நடித்து அசத்தினார் இந்த ஸ்டைல் இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இப்போது ஆரம்பம் படத்திலும் அதே ஸ்டைலில் நடித்துள்ளார் அஜீத்.
இதே ஸ்டைலில் நடித்து அசத்திய நடிகர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

அமிதாப் பச்சன்
பாலிவுட் உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குறியவர் அமிதாப் பச்சன். அவரது தாடி சால்ட் அன் பெப்பர் ஸ்டைலில் இருக்கும். இது நீண்ட நாட்களாகவே ரசிகர்களுக்கு பிடித்த ஸ்டைல்.

ரஜினிகாந்த்
இப்போது இளமையான பல ஹேர்ஸ்டைல்களில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 20 ஆண்டுகளுக்கு முன்கே மிஸ்டர் பாரத் படத்தில் தன்னுடைய ஒரிஜினல் முடியான சால்ட் அன் பெப்பர் ஸ்டைலில் நடித்து அசத்தியிருப்பார். எந்திரன் படத்திலும் சால்ட் அன் பெப்பர் ஹேர் ஸ்டைல் அசத்தலாக அமைந்திருக்கும்.

ஜார்ஜ் குலூனி
ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குலூனி க்ரே ஹேர் ஸ்டைலில் அசத்தலாக தோற்றமளிப்பதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். அவரது இந்த ஸ்டைல்தான் அதிக ரசிகர்களை கவர்கிறதாம்.

அஜீத்
தல அஜீத் சால்ட் அன் பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்த படம் மங்கத்தா. இது ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றது. அதே லுக் மற்றும் ஸ்டைலில் ஆரம்பத்தில் அசத்தியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











