பாகுபலிக்கே டஃப் கொடுக்க போகிறதா சிம்பு படம்.. இதுவரை தொடங்காததற்கு இப்படியொரு பக்கா காரணம் இருக்கா?
சென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் 2020ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பின்னர் 2023ம் ஆண்டு முடியும் வரை இன்னமும் அந்த படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி புதிய படத்தை ஆரம்பிக்கவில்லை.
ரஜினிகாந்தை வைத்து வேறலெவல் படத்தை இயக்க கதையெல்லாம் ரெடி பண்ணி வைத்திருந்தார். ஆனால், அதன் பட்ஜெட் மற்றும் அந்த கதைக்கு தற்போது தனது உடல் ஒத்துழைக்காது என நினைத்த ரஜினிகாந்த் அந்த படத்தை நிராகரித்து விட்டார்.

அதிலே, ஒரு 2 ஆண்டுகள் வீணாகி விட்டன. அந்த படத்தின் கதையை கமல்ஹாசன் பார்த்து அதனை தயாரிக்க முன் வந்த நிலையில், சிம்பு அந்த படத்தில் நடிப்பார் என அறிவிப்பு வெளியாகி ஒரு வருஷம் ஆகும் நிலையில், இன்னமும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லையே ஏன்? என்கிற கேள்விக்கு தற்போது சூப்பரான விளக்கம் கிடைத்திருக்கிறது.
முடி வளர்த்த சிம்பு: பீரியட் படம் என்பதால் இந்த படத்துக்காக கடந்த ஒரு வருஷமாக நீண்ட முடியை வளர்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டு வந்தார் சிம்பு. இந்த ஆண்டு ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்னமும் அந்த படம் ஆரம்பிக்காதது அப்செட் ஆக்கியது.
பாகுபலிக்கு டஃப்: ஆரம்பத்தில் பீரியட் போர்ஷன் முழுவதும் வெறும் 30 கோடிக்கு மட்டும் எடுக்கும் அளவுக்கு பக்காவாக பிளான் போடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது முழுப்படமே பீரியட் படம் தான் என்றும் பட்ஜெட் மேலும் அதிகரிப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி வியப்பை தருகின்றன.
எப்போ ஆரம்பம்: படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை தான் ஒரு வருஷமாக இயக்குநர் தேசிங் பெரியசாமி செய்து வருகிறார் என்றும் மாதிரி படத்தையே உருவாக்கி வருவதாகவும் வீண் செலவுகளை எப்படி குறைத்து பக்காவான பட்ஜெட்டில் பிரம்மாண்ட படத்தைக் கொடுப்பது என்கிற முயற்சிகளில் உள்ள நிலையில், அந்த பணிகளும் நிறைவடைய போவதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











