STR 48: சிம்பு பிறந்தநாளில் STR 48 டைட்டில்... ஸ்பெஷலாக வெளியாகும் இன்னொரு மாஸ் அப்டேட்!
சென்னை: மாநாடு மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு, அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட்டானதை அடுத்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் தனது 48வது படத்தில் கமிட்டாகியுள்ளார். தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்பு பிறந்தநாளில் ஸ்பெஷல் அப்டேட்ஸ்
சிம்புவின் STR 48 படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இதுவரை டைட்டில் கன்ஃபார்ம் ஆகாத இந்தப் படம் தற்போது STR 48 என மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இது பீரியட் ஜானரில் பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில், ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் மட்டுமே பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதேபோல் கிராபிக்ஸ் வேலைகளையும் படக்குழு இப்போதே தொடங்கிவிட்டது. இதனிடையே சிம்புவின் பிறந்தநாள் பிப்ரவரி 3ம் தேதி வருகிறது. இதனால் அவரது பிறந்தநாளை முன்னிட்டு சிம்புவின் STR 48 படத்தில் தரமான அப்டேட்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அதன்படி முதலில் STR 48 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவிக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளதாம். இந்த இரண்டுமே தாறுமாறாக வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 2ம் தேதி மாலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், 3ம் தேதி படத்தின் டைட்டிலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அதேபோல், சிம்பு இரண்டு கேரக்டரில் நடிக்கவுள்ளதோடு, அவருக்கு ஜோடி யார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்தும் சிம்பு பிறந்தநாளில் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், STR 48 படப்பிடிப்பும் பிப்ரவரி இறுதியில் தொடங்கவுள்ளதாம்.
இந்தப் படத்திற்காக தாய்லாந்து, லண்டன் சென்று மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்து வந்தார் சிம்பு. அதுமட்டும் இல்லாமல் பயங்கரமாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையையும் குறைத்துள்ளார். இதனால் STR 48 படத்தில் சிம்புவின் ஆக்ஷன் ட்ரீட் மஜாவாக இருக்கும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். STR 48 படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் அடுத்த படத்தில் நடிக்கலாம் என சிம்பு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











