பொள்ளாச்சி போன்ற கொடூரத்தை தடுப்பது எப்படி?: வைரலாகும் சிம்பு வீடியோ

By Siva

சென்னை: பொள்ளாச்சி சம்பவம் தமிழக மக்களை பதற வைத்துள்ள நிலையில் இது போன்ற கொடூரங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிம்பு அறிவுரை கூறிய வீடியோவை அவரின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

பொள்ளாச்சியில் 200 பெண்களை ஏமாற்றி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த 20 பேர் கொண்ட கும்பலில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 16 பேர் எப்பொழுது கைது செய்யப்படுவார்கள் என்பதே அனைவரின் கேள்வி.

இந்நிலையில் சிம்பு ரசிகர்கள் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

சிம்பு

உங்கள் பிள்ளைகளிடம் தினமும் 5 நிமிடம் பேசுங்கள். விருப்பம் இல்லாத பெண்ணை தொடுவது உங்க அம்மாவை தொடுவது போன்று என்று அனைத்து தாய்களும் மகன்களிடம் தினமும் சொல்லிப் பாருங்கள். அதன் பிறகு யாரும் தொடவே மாட்டான் என்று சிம்பு பேசிய வீடியோவை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

பாராட்டு

சிம்பு பேசியது மிகச் சரி. அம்மாக்களால் தான் பிள்ளைகளின் மனதை மாற்ற முடியும். சிம்பு சொல்வது போன்று சொல்லி சொல்லி வளர்த்தால் பொள்ளாச்சி கொடூரம் போன்று இனி நடக்காது என்று நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் கொடூரத்தை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மக்களும், திரையுலக பிரபலங்களும் பரிந்துரை செய்து வரும் நிலையில் சம்பவம் நடப்பதை தடுக்க அறிவுரை வழங்கியுள்ளார் சிம்பு. அவரின் இந்த குணம் பிடித்துள்ளது என்கிறார்கள் ரசிகர்கள்.

ஜாமீன்

ஜாமீன்

பொள்ளாச்சி வழக்கில் கைதாகியுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுவுக்கு அவரின் அம்மா லதா ஜாமீன் கோரினார். மேலும் நீதிமன்றத்திற்கு வந்த அவர் என் பையன் நல்லவன், அந்த பொண்ணுங்கள கூப்பிட்டு விசாரிங்க என்று கோஷமிட்டார். லதாவின் செயலை பார்த்தவர்கள் அம்மாவே இப்படியா என்று முகம் சுளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X