வாத்தி ரெய்டு வேண்டும்.. ஜன நாயகனை ஜாலியாக்கிய மாணவர்கள்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல!

சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே கல்வி விருதுகள் விழாவை நடத்தி மாணவர்கள் மத்தியில் மாஸ் காட்டி வருகிறார் தளபதி விஜய். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கைகளால் பரிசுகளை வெல்ல வேண்டும் என்பதற்காகவே பல விஜய் ரசிகர்கள் தீவிரமாக படிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்கின்றனர். நல்ல மதிப்பெண்களை பெற்று பரிசு பெற வரும் மாணவர்களும் விஜய் ரசிகர்களாகத்தான் உள்ளனர்.

படிப்பைத் தாண்டி அரசியல் குறித்தும், விஜய்யின் அரசியல் வருகை மற்றும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றிப் பெறுவது உறுதி என்றெல்லாம் மைக் கிடைத்ததும் வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.

Students requests Vijay to do Vaathi Raid against Drugs and makes several obligations at today meet

விஜய்யுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்ளும் போது ஒவ்வொரு மாணவர்களும் செய்த சேட்டைகள் தான் இன்று சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டாகி கொண்டிருக்கிறது. இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலையா என தளபதி ரசிகர்கள் காண்டாகி வருகின்றனர்.

இனிமே அரசியல் தான்: அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக விஜய் முடித்துவிட்ட நிலையில், இனிமேல் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்றும் மாணவர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கு உதவும் வகையில் பல சேவைகளை பல்வேறு இடங்களுக்குச் சென்று களத்தில் இறங்கி வேலை பார்க்கப் போகிறார் என்கின்றனர். இன்று நடைபெற்ற கல்வி விருது விழாவில் விஜய்யிடம் பரிசு பெற்ற பல மாணவர்கள் அவரை ஜாலியாக்கும் விதமாக பேசியது தீயாக பரவி வருகிறது.

Students requests Vijay to do Vaathi Raid against Drugs and makes several obligations at today meet

ஜாலியான ஜன நாயகன்: சந்தோஷ புன்னகையுடன் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தளபதி விஜய்யை சந்தித்து அவரிடம் பரிசுகளை வாங்கிக் கொண்டு அவர் பற்றி புகழ்ந்து பேசி வருவதை கண்டு செம ஜாலியாகி விட்டார் ஜன நாயகன் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் விஜய் தான் அடுத்த முதல்வர் என்றும் தமிழ்நாட்டை விஜய் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை மட்டுமின்றி செங்கோட்டையையும் ஆளும் தகுதி தளபதிக்கு இருக்கு என பேசி வருகின்றனர்.

வாத்தி ரெய்டு வேண்டும்: ஒரு மாணவி பேசும் போது தமிழ்நாட்டில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலுமே அதிகளவில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றிப் பெற்று முதல்வராக மாறி நிஜமாவே போதைப் பொருட்களை ஒழிக்க வாத்தி ரெய்டு பண்ண வேண்டும் அண்ணா என கோரிக்கை வைத்துள்ளார்.

இதெல்லாம் ஓவரா தெரியலையா?: இரண்டு சிறுவர்கள் விஜய் அருகே நின்று போட்டோ எடுத்துக் கொள்ளும் போது, இருவரும் கூலிங் கிளாஸ் மாட்டிக் கொண்டு போஸ் கொடுக்க அவர்களை பார்த்து விஜய் சிரித்த காட்சிகளை ஷேர் செய்து வரும் தளபதி ரசிகர்கள் இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையாடா? எங்க தலைவனை எங்களால இவ்வளவு கிட்ட பார்க்க முடியல, உங்களுக்கு கூலிங் கிளாஸ் ஒரு கேடா என கலாய்த்து வருகின்றனர். ஒவ்வொரு வருஷம் போலவும் இந்த வருஷமும் மாணவர்களுடன் செம ஜாலியாக பேசி, பழகி அவர்கள் பேசுவதை ரசித்து ஹேப்பியாகி உள்ளார் ஜன நாயகன் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X