ஆர்த்திக்கு எதிராக ரவியும், கெனிஷாவும் செம பிளான் போட்ருக்காங்களாம்..என்ன பிளான்?..பிரபலம் ஓபன் டாக்

சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளுக்கு சில நாட்களுக்கு முன்பு நடந்த திருமணத்தில் ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் ஜோடியாக கலந்துகொண்டார். இரண்டு பேரும் ஒரே நிறத்திலான உடையை அணிந்து வந்திருந்தனர். இதன் மூலம் அவர்கள் இரண்டு பேரும் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதை உறுதி செய்திருப்பதாக பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார். கெனிஷாவுடன் ரவி வந்ததை அடுத்து ஆர்த்தி ரவி ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர் ஏகப்பட்ட விஷயங்களை பேசியிருந்தார். விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் பொது நிகழ்ச்சிக்கு ரவி வந்ததற்கு ஒருதரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். முக்கியமாக நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கின்றன.

ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரிவுக்கு காரணம் ஆர்த்தியும் அவரது தாயான சுஜாதாவும்தான் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் ஆர்த்தியோ அந்த சமயத்தில் சில விளக்கங்களை அளித்துவிட்டு அமைதியாகிவிட்டார். பிறகு இந்தப் பிரச்னையும் கொஞ்சம் ஆறியது. சூழல் இப்படி இருக்க ஏற்கனவே இணைத்து பேசப்பட்ட கெனிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக வந்தார் ரவி. தனக்கும் கெனிஷாவுக்கும் எந்தவிதமான உறவும் இல்லை என்று சொன்னவர்; ஒரே நிறமுடைய உடையை அணிந்துகொண்டு வந்திருந்தது பலரையும் ஷாக்காக்கியது. இதனையடுத்து ஆர்த்தியும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Subair reveals that Ravi Mohan and Kenisha have a plan against Aarti

ஆர்த்தி வெளியிட்ட எமோஷனல் அறிக்கை: ஆர்த்தி எமோஷனலாக வெளியிட்டிருந்த அறிக்கையில், "ஒரு வருடமாக நான் அமைதியாக இருந்தேன். இப்போது எனது மௌனத்தை நான் கலைக்கிறேன். இத்தனை நாட்கள் மௌனமாக இருந்ததால் நான் பலகீனமானவள் என்று அர்த்தம் இல்லை. எனது பேச்சைவிடவும் குழந்தைகளின் அமைதியான, நிம்மதியான வாழ்க்கை முக்கியம் என்று நினைத்ததால் அந்த மௌனத்தை நான் கடைப்பிடித்தேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், பழி சொற்கள், வசைகள் அனைத்தையுமே நான் தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும், நியாயமும் இருந்தது.

பொறுப்புகளிலிருந்து விலகிவிட்டார்: உலகம் இன்று பார்க்கும் நாடகங்களும், காட்சிகளும் வேறு. நடந்த உண்மையும் வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதலுடனும் நம்பிக்கையோடும் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் எனது கைகளை மட்டுமில்லை தன்னுடைய பொறுப்புகளையும் துச்சமாக தூக்கி எறிந்துவிட்டு சென்றிருக்கிறார்.கடந்த பல மாதங்களாக அந்தக் குழந்தைகளின் பொறுப்பை நான் எனது தோள்களில் சுமந்துகொண்டிருக்கிறேன்.தந்தை என்பது வெறும் பட்டம் மட்டுமில்லை. அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பிலிருந்தும் அந்த நபர் விலகிவிட்டார்.

நான் ஆர்த்தி ரவிதான்: என் பிள்ளைகளுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பு முக்கியம். நான் ஒரு மனைவியாகவோ அல்லது குற்றச்சாட்டுக்களை சுமந்து நிற்கும் ஒரு பெண்ணாகவோ இப்போது நான் பேசவில்லை. குழந்தைகளின் நலனை காக்க நினைக்கும் தாயாக மட்டும்தான் நான் குரல் எழுப்புகிறேன். நான் இதை செய்ய தவறிவிட்டால் நானும் அவர்களை கைவிட்டது மாதிரி ஆகிவிடும். எனது வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் அந்த எதிரொலிக்கு நீங்கள் செவி சாய்த்துதான் ஆக வேண்டும். என்னை யாரும் ரவியின் முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்றம் முடிவு செய்யும்வரை நான் ஆர்த்தி ரவியாகவே தொடர்வேன்" என்று கூறியிருந்தார்.

குவியும் ஆதரவு: ஆர்த்தியின் அந்த முழு அறிக்கையையும் படித்த பலரும் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். முக்கியமாக ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் தங்களது ஆதரவு கரங்களை ஆர்த்திக்கு நீட்டியிருக்கிறார்கள். குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோரும் இதுதொடர்பாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. ரவி - ஆர்த்தி இடையே பழக்கம் ஏற்பட்டதற்கும், அவர்கள் காதலர்களாக மாறி பிறகு தம்பதிகளாக மாறியதற்கும் குஷ்பூதான் முழு காரணம். அவரும் இந்த விஷயத்தில் ரவியை சமாதானப்படுத்த முயன்றதாகவும் ஆனால் ரவியோ அதற்கு கொஞ்சம்கூட ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அதனால் குஷ்பூ வருத்தத்தில் இருக்கிறார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

சுபைர் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளரான சுபைர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், "குஷ்பூ, ஆர்த்தியின் அம்மா சுஜாதா, கலா மாஸ்டர் ஆகியோரெல்லாம் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து சிங்கப்பூருக்கு சென்றார்கள். அப்போது அவர்களுடன் ஆர்த்தியும் சென்றிருந்தார். அந்த சமயத்தில் ரவியும் சிங்கப்பூரில் இருந்தார். அப்போது இரண்டு பேரும் முதன்முறையாக சந்தித்துக்கொண்டார்கள். பிறகு காதலிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இந்தத் திருமணத்துக்கு முதலில் ரவியின் அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. குஷ்பூதான் அவரிடம் பேசி சமாதானம் செய்து சம்மதம் வாங்கினார். அதன் பின்பு திருமணமும் நடந்தது.

ரவி செய்த தவறு: 15 வருடங்கள் வாழ்க்கை நன்றாகத்தான் போனது. இதில் ரவி செய்த தவறு என்னவென்றால் மாமியார் வீட்டையே முழுவதுமாக சார்ந்து இருந்துவிட்டார். அப்படி இருக்கும்போது பிரச்னைகள் வருகின்றன. அதனையடுத்து அங்கிருந்து கிளம்பி அமைதியை தேடி போகும்போதுதான் கெனிஷாவின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த அறிமுகம் நட்பாகி பின்பு காதலானது. இப்போது பொது இடத்துக்கு அழைத்து செல்லும் நிலைமை வந்துவிட்டது. ஆர்த்தியின் அறிக்கை பலரிடமும் அவருக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

உடனடி விவாகரத்து: ரவிக்கு விவாகரத்து கொடுத்தால் கெனிஷாவை திருமணம் செய்துகொள்வார் என்பது ஆர்த்திக்கு தெரியும். அதனால்தான் அவர் இன்னமும் விவாகரத்து கொடுக்கவில்லை. கெனிஷாவை பொதுவெளிக்கு அழைத்து வந்து ஆர்த்தியை ட்ரிகர் செய்கிறார். ஏனெனில் அப்போதுதான் கோபப்பட்டு அவர் டைவர்ஸ் கொடுப்பார். அதுதான் ரவியின் பிளான். ஐசரி கணேஷ் போன்ற பெரிய வீட்டு திருமணத்துக்கு கெனிஷாவுடன் வந்தால் இது சர்ச்சையாகும் என்று ரவிக்கு தெரியும். அவர் தெரிந்து திட்டமிட்டுதான் கெனிஷாவுடன் அந்தத் திருமணத்துக்கு வந்தார். அதை பார்த்து மனம் வெதும்பி ஆர்த்தி அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் அடுத்த நாளும் ரிசப்ஷனுக்கு கெனிஷாவுடனேயே வருகிறார் ரவி.

கெனிஷா செய்த வேலை: ஆர்த்தி அறிக்கை வெளியிட்ட பிறகு அவருக்கு சினிமாவில் ஆதரவு பெருகியது. இதனையடுத்து கெனிஷாவோ ஆர்த்தியின் பெயரை சொல்லாமல் இன்ஸ்டாகிராமில் ஆர்த்தியை குறிப்பிட்டு பதிவுகளை போடுகிறார். இந்த விஷயம் அடுத்தடுத்த நகர்வுகளில் சர்ச்சையாகத்தான் போகும். கெனிஷா அடிப்படையில் ஒரு ஆப்பிரிக்க - இந்திய பெண். தமிழ்நாடு, பெங்களூருவில் இருந்த அவர் இப்போது கோவாவில் வாழ்ந்துவருகிறார். அவரது லைஃப் ஸ்டைல் வேறு. அந்த லைஃப் ஸ்டைல் ரவிக்கு பிடித்திருக்கிறது. சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டு இதனை ரவி செய்தால் ஒன்றும் இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X