விஜய், திரிஷா, எஸ்.ஏ.சி.. சந்தேகப்பட்ட சங்கீதா.. அசிங்கப்படுத்தும் சுசித்ரா.. எல்லை மீறி பேசுறாங்க

சென்னை: விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் கோலிவுட்டில் பெரிய புயலை கிளப்பியிருக்கிறது. அவர்களது மனு லீக்கான பிறகு அதில் இருக்கும் விஷயங்களை வைத்து ஆளாளுக்கு இஷ்டத்துக்கு பேசுகிறார்கள். அவர்களில் சுசித்ராவும் ஒருவர். சில நாட்களாக தொடர்ந்து பேட்டி கொடுத்துவரும் அவர்; சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் விஜய் குறித்தும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் குறித்தும் தன்னுடைய இஷ்டத்துக்கு பேசியிருக்கிறார் அவர்.

விஜய்யின் மனைவி சங்கீதா தனக்கு விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார். இதுகுறித்து விஜய் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். நேற்று தஞ்சையில் நடந்த கூட்டத்தில்கூட குட்டி ஸ்டோரி சொல்லியாவது இந்த விஷயத்தை பற்றி பேசுவார் என்றுதான் அனைவருமே எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. தங்கள் தளபதி இவ்விவகாரத்தில் இவ்வளவு தைரியமாக இருக்கிறாரே பிறகு நமக்கு என்ன பிரச்னை என்று தவெகவினரும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Suchitra Speaks on Vijay Trisha and S A Chandrasekhar Mentions Sangeetha s Doubts
Photo Credit:

எழும் கோரிக்கை: அதேசமயம் விஜய்யின் இந்த மௌனம் அவருக்கும், அவரது கட்சியினருக்கும் ஓகேதான் என்றாலும்; விர்ச்சுவல் வாரியர்ஸ் சங்கீதா மீது நடத்திய, நடத்தும் சைபர் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு கண்டிப்பாக வாயை திறக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கை. இன்னமும் சோஷியல் மீடியாவில் இஷ்டத்துக்கு அவர்கள் சங்கீதா பற்றி பேசிவருகிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய ஒன்று. இது ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் யூடியூபில் சில பிரபலங்களும் விஜய் - சங்கீதா விவாகரத்து பற்றி தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.

சுசித்ரா பேட்டி: அந்தவகையில் பின்னணி பாடகி சுசித்ரா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "விஜய்க்கு அரசியல் வேண்டாம். அவர் மீண்டும் சினிமாவுக்கே போக வேண்டும். அஜித், சூர்யா எல்லாம் சினிமாவை விட்டு போய்விட்டார்கள். ரஜினிகாந்த்துக்கு பிறகு அதே லெவலுடன் வேறு யாருமே கோலிவுட்டில் இல்லை. விஜய் மட்டும்தான் இருக்கிறார். அங்கே அவருக்கான பெரிய இடம் காத்திருக்கிறது. அரசியல் சுத்தமாக ஒத்துவராது. அவருக்கு அரசியல் தெளிவு எல்லாம் இல்லை என்றுதான் நான் சொல்வேன். அவர் மீது அக்கறை எடுத்துதான் இப்படியெல்லாம் திட்டுகிறேன். நான் பேசுவதற்கு அவர் எதுவும் சொல்லமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

Also Read
Jana Nayagan Release Date: ஜனநாயகன் ரிலீஸ் தேதி.. உறுதியா நம்பலாம் இந்த முறை தளபதிக்கு மிஸ்ஸே ஆகாது!
Jana Nayagan Release Date: ஜனநாயகன் ரிலீஸ் தேதி.. உறுதியா நம்பலாம் இந்த முறை தளபதிக்கு மிஸ்ஸே ஆகாது!

அம்மா பற்றி: சங்கீதா காதில் விஜய்யின் அம்மா என்னென்னம்மோ போட்டுக்கொடுப்பார். அதையெல்லாம் வைத்து சந்தேகப்பட்டு சங்கீதா செக் செய்துகொண்டே இருப்பார். இப்படியெல்லாம் செய்யாதே என்று விஜய் எவ்வளவோ முறை சொல்லியிருக்கிறார். இதில் எப்படி திரிஷா உள்ளே வந்தார் என்றுதான் தெரியவில்லை. விஜய்யை எப்படி சங்கீதாவிடமிருந்து நகர்த்தினார் என்றும் தெரியவில்லை. அதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகரும் மோசமானவர்தான். ஒருமுறை படத்தின் ஷூட்டிங்கில் டான்ஸர் பெண்ணை விஜய்யின் கேரவனுக்குள் அனுப்பியவர்தான் இந்த சந்திரசேகர். அதை நினைத்து விஜய் ரொம்பவே என்னிடம் ஃபீல் செய்திருக்கிறார்.

காலில் விழுந்த பெண்: அந்தப் பெண் கேரவனுக்குள் வந்ததுமே பதறிய விஜய், நீ இங்கிருந்து போய்விடு என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்தப் பெண்ணோ காலில் விழுந்து, 'அண்ணா ஒரு பத்து நிமிடங்கள் இருந்துவிட்டு போகிறேன். உடனே சென்றால் உங்கள் அப்பா அடிப்பார் அண்ணா' என கெஞ்சியிருக்கிறார். இப்படிப்பட்ட அப்பா, அம்மாவால் வளர்க்கப்பட்ட பையன்தான் விஜய். அவர் அரசியலில் இருந்தால் கண்டிப்பாக அவரை அரசியல் கவிழ்த்துவிடும். அதனால்தான் சொல்கிறேன்" என்றார். தொடர்ந்து இப்படியாக பேசப்படும் சுசித்ரா மீது சம்பந்தப்பட்ட தரப்பு நிச்சயம் வழக்கு தொடர வேண்டும் ஒருதரப்பினர் வலியுறுத்தி சொல்ல தொடங்கியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X