ஃபோன் போட்ட ரஜினி: படத்தை தள்ளிப் போட்ட கன்னட நடிகர் சுதீப்

By Siva

பெங்களூர்: கே.எஸ். ரவிக்குமார் என் படத்தை முதலில் இயக்கட்டுமே என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து கூறியதால் தனது பட வேலையை தள்ளிப் போட்டதாக கன்னட நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக உள்ளவர் நான் ஈ படத்தில் நடித்த சுதீப். அவர் இயக்கிய மானக்யா படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. இதையடுத்து அவரை கே. எஸ். ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது.

இந்நிலையில் அந்த படம் தள்ளிப் போயுள்ளது.

ரவிக்குமார்

ரவிக்குமார்

கே.எஸ். ரவிக்குமாருடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் அந்த பட வேலை தற்போது தள்ளிப் போடப்பட்டுள்ளது. அவர் ரஜினி சார் படத்தில் வேலை செய்து வருகிறார் என்றார் சுதீப்.

ரஜினி

ரஜினி

ரஜினி சார் எனக்கு போன் செய்து உங்கள் படத்திற்கு முன்பு ரவிக்குமார் என் படத்தை இயக்கட்டுமா என்று கேட்டார் என்று சுதீப் தெரிவித்தார்.

சம்மதம்

சம்மதம்

அவ்வளவு பெரிய மனிதர் எனக்கு போன் செய்து கேட்கும் போது மறுக்க மனமில்லை. அதனால் சந்தோஷமாக சரி என்று அவரிடம் தெரிவித்தேன் என்றார் சுதீப்.

விஜய்

விஜய்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் சுதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X