லிங்கா செட்டில் ரஜினியைச் சந்தித்த கிச்சா சுதீப்!
லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் ரஜினியைச் சந்தித்துப் பேசினார் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்.
ரஜினி, அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடிக்கும் ‘லிங்கா' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. பெரும்பாலான காட்சிகள் கர்நாடகாவில் படமாக்கப்பட்டு வருகின்றன.
படப்பிடிப்பில் ரஜினியை நடிகர், நடிகைகள் பலர் நேரில் சந்தித்த வண்ணம் உள்ளனர்.

கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், அம்பரீஷ் ஆகியோர் ரஜினியை சந்தித்து பேசினர். ரஜினியுடன் ஏற்கனவே ஜோடியாக நடித்த மீனா, ஸ்ரீப்ரியா ஆகியோரும் நேரில் சந்தித்தார்கள்.
தற்போது கன்னட நடிகர் சுதீப்பும் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
இது குறித்து சுதீப் கூறும் போது, "சூப்பர் ஸ்டார் ரஜினியை ‘லிங்கா' படப்பிடிப்பில் சந்தித்தேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சினிமா உலகில் ரஜினி ஒரு சகாப்தமாக இருக்கிறார். அவரை சந்தித்தது இனிமையான தருணமாக இருந்தது," என்றார்.
சுதீப் ‘நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.


Click it and Unblock the Notifications











