விஜய்யுடன் நடிக்க கன்னட நடிகர் சுதீபுக்கு ரூ.6 கோடி சம்பளம்!!!
சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க கன்னட ஹீரோவான சுதீப்புக்கு ரூ. 6 கோடி சம்பளமாம்.
கன்னட படங்களின் மொத்த பட்ஜெட்டே சில கோடிகளைத் தாண்டாது. நடிகர், நடிகைகளுக்கு தமிழ், தெலுங்கு மாதிரி பெரிய சம்பளம் எல்லாம் தரப்படுவதில்லை.
இந் நிலையில் விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கத்தி படத்தின் தயாரிப்பாளர் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடியை வேறு சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார்.
இதனால் கத்தி படத்திற்கு கத்திக்குத்து விழும் என்று கிசுகிசுக்கிறார்கள்.

சிம்புதேவன்
விஜய் கத்தியை முடித்துவிட்டு சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் மயிலு ஸ்ரீதேவியும் நடிக்கவிருக்கிறார்.

சுதீப்
கன்னட முன்னணி ஹீரோவான சுதீப் சிம்புதேவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் விஜய் கதாபாத்திரம் போன்று முக்கியத்துவம் உள்ளதாம். சுதீப் நான் ஈ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம்
சிம்புதேவன் படத்தில் நடிக்க சுதீப்பின் சம்பளம் ரூ. 6 கோடியாம். இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் கன்னட நடிகர் என்ற பெருமையை சுதீப் பெற்றுள்ளார்.

ஹீரோயின்
விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே அல்லது ஸ்ருதி ஹாஸனை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம். இடையே பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமானதாக வேறு செய்திகள் வந்தன. ஹீரோயின் யார் என்பதை சிம்பு தான் தெளிவுபடுத்த வேண்டும்.

விஜய் 58
சிம்புதேவன் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போதைக்கு விஜய் 58 என்று பெயர் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











