புறநானூறு படத்துக்கு என்னதான் ஆச்சு?.. சுதா கொங்கரா சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை: சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனையொட்டிதான் தனது மனைவி ஜோதிகாவுடன் அவர் மும்பையிலேயே செட்டில் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இயக்குநர் சுதா கொங்கரா புறநானூறு படம் பற்றி பேசியிருக்கிறார்.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அதேசமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். திஷா பதானி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

பல மொழிகளில்: சூர்யாவின் கரியரிலேயே கங்குவா படம்தான் ஹை பட்ஜெட் படம். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பதற்காக அவரும் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன கதை: இந்தப் படமானது பீரியட் ஜானரில் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க பீரியட் ஜானரில் கங்குவா வராது என்றும்; கதையின் பெரும்பாலான பகுதிகள் இந்தக் காலகட்டத்தில் நடப்பது மாதிரிதான் கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும்; குறிப்பிட்ட சில நிமிடங்கள்தான் பீரியட் ஜானரில் படம் நகரும் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.
அடுத்த படம்: இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் புறாநானூறு படத்தில் சூர்யா கமிட்டானார். இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்த சூரரைப் போற்று படம் கமர்ஷியலாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட்டானது. குறிப்பாக பல தேசிய விருதுகளை அள்ளியது. இதன் காரணமாக மீண்டும் சூர்யாவும், சுதாவும் இணைவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சுதா கொங்கரா விளக்கம்: ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி. படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. சூர்யாவுக்கும், சுதாவுக்கும் பிரச்னை அதன் காரணமாக சூர்யா புறநானூறிலிருந்து விலகிவிட்டார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் படம் குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுதா கொங்கரா, "புறநானூறு படம் கண்டிப்பாக நடக்கும். காலங்கள் ஆனாலும் அது கட்டாயம் ரிலீஸ் ஆகும்" என்று தெரிவித்திருக்கிறார். படம் நடக்கும் என்று அவர் தெளிவாக கூறிவிட்டாலும் சூர்யா இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து சுதா பேசாததால் ரசிகர்கள் குழப்பமடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











