சுள்ளான் டூ இளைய தளபதி: விஜய் கடந்து வந்த பாதை, ஒரு பார்வை
சென்னை: இன்று 40வது பிறந்தநாள் காணும் இளைய தளபதி விஜய்யின் வளர்ச்சியை பற்றி பார்ப்போம்.
பல ஆண்டுகளாக கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் அவர் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

சுள்ளான்
விஜய் 1984ம் ஆண்டு வெற்றி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதையடுத்து அவர் தொடர்ந்து 5 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

ஹீரோ
நாளைய தீர்ப்பு படம் மூலம் விஜய் ஹீரோ அவதாரம் எடுத்தார். 1992ம் ஆண்டில் வெளியான இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த புதுமுகத்துக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது கிடைத்தது.

பூவே உனக்காக
நாளைய தீர்ப்புக்கு பிறகு விஜய் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு ரசிகை கூட்டத்தை சம்பாதித்துக் கொடுத்த படம் பூவே உனக்காக.

காதலுக்கு மரியாதை
விஜய்யின் கெரியரில் மறக்க முடியாத படம் காதலுக்கு மரியாதை. ஏற்கனவே சொன்ன கதை தான் என்றாலும் அதை படமாக்கிய விதம் புதிதாக இருந்ததால் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடித் தீர்த்தனர்.

குட்டி
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் குட்டியாக வந்த விஜய் ரசிகர்கள் மனதில் நிலையாக நின்றுவிட்டார். படத்தில் டான்ஸ் தவிர நடிப்பிலும் அசத்தி இருந்தார்.

பிளாப்
விஜய் தொடர்ந்து ஹிட் படங்களாக ஒன்றும் கொடுத்துவிடவில்லை. பிளாப் மேல் பிளாப் கொடுப்பார். திடீர் என்று ஹிட் கொடுப்பார், யாரும் எதிர்பார்க்காத போது சூப்பர் ஹிட் கொடுப்பார்.

இடுப்பு
ஒரு இடுப்பால இவ்வளவு பிரச்சனை வருமா என்பதை தமிழகத்திற்கு தெரிவித்த படம் குஷி. விஜய் ஜோதிகாவின் இடுப்பை சந்து கேப்பில் பார்த்துவிட்டு படாத பாடு பட்ட படம் சூப்பர் ஹிட்டானது.

கில்லி
கில்லி படத்தில் விஜய்யின் நடிப்பு பரபரவென இருந்தது. அந்த படத்தில் பிரகாஷ் ராஜ் கூறும் ஐ லவ் யூ டா செல்லம் வசனம் இன்றும் பிரபலம்.

இரண்டு வகை
சீட்டில் உட்கார முடியாத அளவுக்கு கொடூர மொக்கை படங்களையும் இளைய தளபதி விஜய் கொடுத்துள்ளார். 3 மணிநேரம் போனதே தெரியாத அளவுக்கு நச் படங்களையும் அவர் கொடுத்துள்ளார்.

தலைவா
விஜய்யால் மறக்காத முடியாத படம் தலைவா. படத்தை ரிலீஸ் செய்ய அவர் பட்டபாடு தமிழகத்திற்கே தெரியும்.

கத்தி
விஜய் தற்போது தன்னை வைத்து துப்பாக்கி ஹிட் படம் கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











