’தலைவர் 168’ படத்தைத் தொடர்ந்து விஜய்சேதுபதி படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்?
சென்னை: 'தலைவர் 168' படத்தைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் பொன்.ராம் இந்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன் பிக்சர்ஸ் சார்பில் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ்
இந்த ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பேட்ட, காஞ்சனா 3 மற்றும் நம்மவீட்டுப் பிள்ளை என மூன்று படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இந்த மூன்று படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் சன் பிக்சர் நிறுவனத்துக்கு லாபத்தைக் கொடுத்துள்ளது.

தலைவர் 168
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினியின் ‘தலைவர் 168' படத்தையும் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.

விஜய்சேதுபதி
மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், தளபதி 64 என 2020ம் ஆண்டிலும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து கலக்க உள்ளார். இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனை தொடர்ந்து
சிவகார்த்திகேயனை வைத்து மூன்று படங்களை பேக் டு பேக் இயக்கிய இயக்குநர் பொன்ராம் தற்போது விஜய்சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

பொங்கலுக்கு எம்.ஜி.ஆர் மகன்
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆர் மகன் பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காப் ஸ்டோரி
கிராமத்து கதைகளை இயக்கி வந்த இயக்குநர் பொன் ராம் முதன்முறையாக அதிரடியாக ஒரு காப் ஸ்டோரியை விஜய்சேதுபதியை வைத்து இயக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் எல்லாம் ஓகே ஆகி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











