தமிழ் சினிமாவிலே முதல் முறை.. தளபதி 66 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகைக்கு வாங்கிய சன் டிவி!
சென்னை: தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 66 படத்தின் சாட்டிலைட் உரிமத்தையும் பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டோலிவுட் இயக்குநரான வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார்.
இன்னும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பே முடிவடையாத நிலையில், தளபதி 66 சாட்டிலைட் உரிமம் தொடர்பான பிசினஸ் தமிழ் சினிமா உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கலெக்ஷன் கிங்
கோலிவுட்டின் கலெக்ஷன் கிங்காக முதலிடத்தில் நடிகர் விஜய் இருப்பதாக ஏகப்பட்ட டிராக்கர்கள் கணித்துள்ளனர். தளபதி விஜய்யின் படங்கள் பெருமளவில் வசூலை குவித்து வருகின்றன. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

தளபதி 66
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில், தளபதி 66 படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 66 படத்தின் சாட்டிலைட் உரிமம் குறித்த ஹாட் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

கைப்பற்றிய சன் டிவி
பீஸ்ட் படத்தை தயாரித்து வரும் சன் குழுமம் அடுத்ததாக தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இயக்கத்தில் நடிக்க உள்ள தளபதி 66 படத்தின் தமிழ் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி பெரும் தொகைக்கு கைப்பற்றி உள்ளதாக அட்டகாச தகவல்கள் வெளியாகி உள்ளன.

இத்தனை கோடியா
பிகில், மாஸ்டர் படங்களின் சாட்டிலைட் உரிமமே 50 கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ள நிலையில், தளபதி 66 படத்தின் சாட்டிலைட் உரிமம் சுமார் 70 கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆகியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷா
தளபதி 66 படம் உருவாக காரணமாக இருந்ததே நடிகை கீர்த்தி சுரேஷ் தான் என்றும் சில தகவல்கள் வைரலாகி வருகின்றன. மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்னொரு நாயகியும் படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











