»   »  மன்மத தமன்னா, சுனைனா

மன்மத தமன்னா, சுனைனா

Subscribe to Oneindia Tamil

நெட்டழகி தமன்னாவும், சூப்பர் அழகி சுனைனாவும் இணைந்து கலக்கும் மதன் வேகமாக வளரஆரம்பித்துள்ளது.

தெலுங்கில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் ஜெய் ஆகாஷ். அப்படியே தமிழ் பக்கம் வந்த அவர்,அடுத்தடுத்து படங்களை இறக்கி விட்டு ஆச்சரியப்படுத்தினார்.

எங்கிருந்துதான் இவருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ என்று எல்லோரும் குழம்பிக் கொண்டிருக்க அப்புறம் தான்தெரிந்தது அந்த ரகசியம். பார்ட்டி நடிக்கும் படங்களுக்கு அவரேதான் பைனான்ஸ் செய்வாராம். இதனால்தான்அடுத்தடுத்து படங்கள் வந்து கலக்கின.

அப்படி தொடர்ந்து படங்களைக் கொடுத்தும் கூட தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல்துவண்டு கிடந்தார் ஆகாஷ். இடையில் பிரகதியுடன் காதல் வேறு. இவருடன் நடிக்க ஆரம்பித்த பிறகு பிரகதியைவெளியில் பார்க்கவே முடியவில்லை. ஆள் அட்ரஸே இல்லை.

இந்த நிலையில் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார் ஆகாஷ். அவர் நடிக்கும் புதுப் படத்தின்பெயர் மதன். பெயருக்கேற்ப மன்மத விளையாட்டுக்கள் நிறைந்த படம்தானாம்.

சேது படத்தை எடுத்த கந்தசாமிதான் தயாரிக்கிறார். கூட சேர்ந்து ஆகாஷ் பைனான்ஸ் செய்கிறாராம். ஆகாஷுக்குஇதில் இரண்டு ஜோடிகள். ஒருவர் தமன்னா, இன்னொருவர் சுனைனா. இதுதவிர இன்னொரு நாயகியையும்போட தீர்மானித்துள்ளனர். அவரைத் தேடி வருகிறார்களாம்.

இபப்படத்தில் 3 கெட்டப்புகளில் வருகிறாராம் ஆகாஷ். இதற்காக தனது உடல் எடையில் 10 கிலோவைக்குறைத்து விட்டாராம். ரொம்ப நாளைக்குப் பிறகு இசையமைப்பாளர் பாபி இப்படம் மூலம் இன்னொரு ரவுண்டுவரவுள்ளார். கபிலன், ஸ்னேகன் பாடல்களை எழுதியுள்ளனர்.

சுனைனா படு கிறக்கமாக இருக்கிறார். மறுபக்கம் தமன்னா, தெனாவட்டாக இருக்கிறார். இரண்டு கிளாமர்சுனாமிகளும் சேர்ந்தால் என்னாகும்?

என்னென்னமோ ஆகும் போங்கோ!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil