நாயகனாக களமிறங்கும் சுந்தர் சி... நாளைக்கு டைட்டில் ரிலீசாக இருக்காம்!
சென்னை : கட்டப்பாவ காணோம் படத்தின் மூலம் கவனம் பெற்ற மணி செய்யோன் இயக்கத்தில் இணைந்துள்ளார் சுந்தர் சி.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டில் துவங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் அதையொட்டிய டீசர் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் சுந்தர் சி
நடிகராகவும் தன்னை கோலிவுட்டில் நிலைநிறுத்தியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி. பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவரது இயக்கம் ப்ளஸ் நடிப்பில் சமீபத்தில் அரண்மனை 3 படம் வெளியானது. ஆர்யா, ஆன்ட்ரியா நடிப்பில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல்ரீதியாக வெற்றிப் பெற்றது.

சுந்தர் சியின் அடுத்த படம்
இந்நிலையில் சுந்தர் சி அடுத்ததாக ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் அடுத்த படத்தை அறிவித்து சூட்டிங்கை துவக்கியுள்ளார். ஊட்டியில் இதன் படப்பிடிப்பு துவங்கி ஒரேகட்டமாக சூட்டிங்கை முடித்துவிட்டுதான் படக்குழு சென்னை திரும்பவுள்ளதாம். இந்தப் படத்தில் டிவி தொகுப்பாளர் டிடியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அவர் அப்டேட் தெரிவித்திருந்தார்.

நாயகனாக நடிக்கும் சுந்தர் சி
தற்போது தலைநகரம் 2, இயக்குநர் பத்ரி இயக்கத்தில் பட்டாம்பூச்சி மற்றும் மணி செய்யோன் இயக்கத்தில் ஒரு படம் என நாயகனாகவும் பிசியாக நடித்தும் வருகிறார் சுந்தர் சி. மணி செய்யோன் இயக்கத்தில் சுந்தர் சி நடித்துவரும் படத்தை மணிகண்ட ராமன் தயாரித்து வருகிறார்.

க்ரைம் திரில்லர் படத்தில் சுந்தர் சி
க்ரைம் திரில்லர் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் சுந்தர் சியுடன் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

சுந்தர் சி படத்தின் டைட்டில் வெளியீடு
கடந்த ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், தற்போது ஏறக்குறைய சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தற்போது படத்தின் டைட்டிலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. டைட்டில் மற்றும் அதையொட்டிய டீசர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











